#விவசாயிகள்_சங்க_ஈட்டி_முனை_மறைவு
———————————————————
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு தொடங்கிய உழவர் போராட்டத்தில் சாதாரண ஒரு உழவனாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.துப்பாக்கி முனை என்று தனது பேச்சைத் தொடங்கி எந்த சாமியும் வரவில்லை நாராயணசாமி வந்திருக்கிறது என்று ஊர் தோறும் முழங்கியவர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் தும்பிச்சிபாளையம் என்ற ஊரில் பிறந்த குப்புசாமி அவர்கள் 70 களில் விவசயிகள் உரிமை இயக்கத்தை ஊர் ஊராக கொண்டு சென்றதில் அவரது பங்கும் பெரும் பங்கு. அந்த மனிதர் இன்றைக்கு நம்மை விட்டு பிரிந்து விட்டார். இருந்தாலும் அவர் காலத்தில் உருவாக்கிய எழுச்சியின் வீச்சு தான் இன்று உழவர்களை தலைநிமிர்ந்து நடக்க வைக்கிறது உழவர்களின் தலைவனாக விளங்கிய ஈட்டி முனை குப்புசாமி அவர்களுக்கு வீரவணக்கம்..
No comments:
Post a Comment