——————————————————-
தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா புதிய அணை கட்ட இருக்கின்றது. தமிழகத்தை கலந்தாலோசிக்காமல் காவிரி பிரச்சினையைப் போல தென்பெண்ணையிலும் தன்னுடைய அடாவடித்தனத்தை காட்ட முற்பட்டுள்ளது. மேகேதாட்டிலும் அணை கட்ட பிரச்சினைகளை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கடந்த வருடம் 2020,கொரானா காலத்தில் ஆட்சியில் இருந்த தமிழக அதிமுக அரசு இதற்கான எதிர்வினையினை ஆற்றவில்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கவில்லை என்பது ஒரு வேதனையான விடயம். ஆற்றின் கடைமடை பகுதியான தமிழகத்தின் ஐந்து மாவட்டங்கள் இதனால் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும்.
கர்நாடகா மத்திய ஜலசக்தி அமைச்சரிடம் 2020 ஜனவரியில் பேச்சுவார்த்தை நடந்தது. இதன் முதல் கூட்டம் 2020 பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி டில்லியில் நடைபெற்றது. தமிழகத்தின் அதிகாரிகள் இதில் கலந்துக் கொண்டு மார்க்கண்டேய அணை கட்டுவதற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கோலார், மாலூர், பங்காருபேட்டை நகரங் மட்டுமன்றி 45 கிராமங்களுக்கு நீர் வழங்குவதற்காக மட்டும் இந்த அணை கட்டப்படுவதாக அந்தக் கூட்டத்தில் கர்நாடக மாநுல அதிகாரிகள் தெரிவித்தனர். இதைக் குறித்து சரியான பதிலளிக்காமல் தமிழக அதிகாரிகள் அன்றைக்கு கண்டும் காணாமல் சென்றது மிகவும் வேதனையான விடயம்.
1892 மெட்ராஸ-மைசூர் ஒப்பந்த்தை மீறி இன்றைக்கு கர்நாடக அரசு 430 மீட்டர் நீளம் 50 மீட்டர் உயரம் கொண்ட அணை கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவிட்டது. இந்த அணைக்கு மதகுகள் கூட வைக்காமல் 125 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கும் அளவிற்கு அணை அமைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இனி கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து வருவது இனி சந்தேகம் தான்.
கிருஷணகிரி மாவட்டத்தில் நாச்சியார் குப்பம் அருகேயுள்ள கர்நாடக வனப்பகுதியான யார்கோளில் கட்டிய புதிய அணையினால் தமிழகத்திற்கு ஏற்படப் போகும் பாதிப்புகளை எளிதாக கடந்து செல்ல முடியாது. தென்பெண்ணை ஆற்றினைக் குறித்த எனது முந்தைய பதிவுகள் வருமாறு.
தென்பெண்ணை_ஆற்றின்_சிக்கல்
https://ksradhakrishnan.in/?p=2880
தென்பெண்ணை_ஆற்று_நீர்
https://ksradhakrishnan.in/?p=2886
தென்பெண்ணை ஆறு தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் (நந்தி துர்க்கம்) பெண்ணை ஆறாக பிறந்து, 430 கிமீ தூரத்தில் பாய்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

தென்பெண்ணை ஆறு, கர்நாடகா மாநிலத்தில் 112 கிமீ நீளத்திலும், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 180 கிமீ நீளத்திலும், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் 34 கிமீ நீளத்திற்கும், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 106 கிமீ நீளத்திற்குப் பாய்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் சுமார் 14,449 சதுர கி.மீ2 ஆகும். மார்கண்ட நதி, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆறு இதன் முக்கிய துணையாறுகளாகும்.
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
02.07.2021
#ksrposts
No comments:
Post a Comment