Friday, February 17, 2017

ஹைட்ரோ கார்பன்

விவசாயம்,குடி நீரை பாதிக்கும்
ஹைட்ரோ கார்பன் புதுக்கோட்டையில்  எடுக்கும் திட்டம் நேற்று அறிவிப்பு.
ஆபத்தான செய்தியே...
 இது மீத்தேன் போன்ற பிரச்சனை
ஆகும்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்தில் உள்ள, நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்...!
புதுக்கோட்டை நெடுவாசல் மட்டுமல்ல
மதுரை,விருதுநகர்,ராமநாதபுரம்,
சிவகங்கை மாவட்டங்களில் பெட்ரோல் ஹைட்ரோகார்பன் வாயு
இருக்குமிடங்களைஓ.என்.ஜி.சி
அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.

புதுகை, தஞ்சை விவசாயிகளை இரண்டு மாவட்ட எல்லையில் எரிவாயு எடுக்கும் திட்டம். அரசு .!

 இந்தியாவில் 31  இடங்களில், 15 ஆண்டுகளுக்கு அனுமதி.

 நெடுவாசல் பகுதி நல்ல மண் வளமும், நீர்வளமும்;தென்னந்தோப்பு, நெல், காய்கறிகள், மலர்கள்  அதிகம் விளைகிற வளமான விவசாயப்பகுதி. 

 இந்தப்பகுதியில் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்க 2000 அடிக்கு மேல் போர்வெல் அமைக்கவேண்டும்.
தண்ணீரை சுத்தமாக வெளியேற்ற வேண்டும் .
பின்னர் அந்த இடத்தை வெற்றிடமாக்கிய பின்னர்தான் எரிவாயுவை எடுக்க முடியும் .!

15 ஆண்டுக்கு பிறகு இந்த இடத்தில் அடுத்த திட்டம், நிலக்கரி எடுக்க அனுமதி வழங்குவதாகும்.

பின்னர் அப் பகுதி பாலைவனமாகும். விவசாயம் செய்யமுடியாத பகுதியாக மாறும்..!

இந்த ஊர் 1974 க்கு முன்னர், தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்தது. 
அதன்பின்னர் புதுக்கோட்டை மாவட்டத்தின் கீழ்பகுதியின் கடைசி கிராமமாக இணைக்கப்பட்டது.

 காவிரிப் பாசனப் பகுதியோடு இணைந்த இந்த கிராமத்தை அடுத்து, தஞ்சை மாவட்டம் தொடங்குகிறது.  இந்த ஊரில் தற்போது எரிவாயு எடுக்கும் திட்டத்தை அமல் படுத்துகிறது மத்திய அரசு.

தஞ்சைப் பகுதியின் இயற்கை வளங்களைச் சுரண்டி,  பாலைவனமாக்கும் வேலையை மத்திய அரசு முன்னெடுக்கிறது  .

இதனை புதுக்கோட்டைதானே என்று எண்ணவேண்டாம்.  தஞ்சை விவசாயிகளும் சேர்த்து போராட வேண்டும் .

 இந்த திட்டத்தால் ஆலங்குடி, பேராவூரணி, கந்தர்வகோட்டை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, அறந்தாங்கி  ஆகிய சட்டமன்றத் தொகுதியின் பகுதிகள் நேரடியாகவும், உடனடியாகவும், அதற்கப்பால் உள்ள பகுதிகள் காலப்போக்கிலும் மிகப் பெரும் பேரழிவைச் சந்திக்க உள்ளது..!

பல லட்சம் விவசாயிகளின் வளமான நிலங்களும், விவசாயத் தொழிலும், வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்படும்..விவசாயம் காப்போம்

No comments:

Post a Comment

*Be yourself, none is perfect, to get everything right*.

*Be yourself, none is perfect, to get everything right*. If something goes wrong, that is completely okay, it happens. Step up to get things...