விவசாய தற்கொலைகளும் மத்திய அரசின் கமிஷன்களும்
..............................................................
விவசாயிகளின் பிரச்சினையில் மத்திய அரசு 2007ல் நியமித்த எம்.எஸ்.சுவாமிநாதன் குழு விவசாய விளைப்பொருட்களுக்கு கூடுதலாக விலை நிர்ணயிக்க வேண்டுமென்றும் அதாவது 50% குறைந்தபட்ச ஆதார விலை இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்த்து.
மத்திய அரசு 2007 ல் நியமனம் செய்த மற்றொரு குழுவான இராதாகிருஷ்ணன் கமிட்டி விவசாயிகளினுடைய கடன் தொல்லைகளை தீர்க்க வேண்டுமென்று பரிந்துரை செய்தனர்.
ரெங்கராஜன் கமிட்டி 2008ல் மத்திய அரசு விவசாயிகள் பிரச்சினை குறித்து ஆராய அமைத்த்து. இந்த குழு விவசாயிகளின் கடன்களை குறித்து ஆய்ந்து சில சிபாரிசுகளை வெளிப்படுத்தியது. இந்தக் குழு விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் முறைசாரா கடன்கள். தனியாரிடம் வாங்கிய கடன்களின் வட்டிவிகிதம் அதிகமாக இருப்பதால் விவசாயிகளால் திருப்பிச் செலுத்த முடியவில்லை. அப்படி செலுத்த முடியவில்லையென்றால் கடன் கொடுத்த தனியார்களின் மிரட்டல்கள், பரிகாசங்களுக்கு பயந்துப் போய் என்ன செய்வதென்று தெரியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்கின்றனர்.
இதற்கெல்லாம் மூல காரணம் பருவ மழை பொய்த்து விவசாயிகள் வேளாண் தொழிலை செய்ய முடியாதது. விவசாய விளைப்பொருட்களுக்கு கட்டுப்படியான விலை இல்லை. இந்தப் பிரச்சினைகளால் தான் அடிப்படையில் அப்பாவி விவசாயிகள் வேறு வழி தெரியாமல் தற்கொலை, மற்றும் கவலையில் உடல் நலம் கெட்டு மரணமடைகின்றனர்.
இந்தியாவில் 1988ல் துவங்கிய விவசாயிகள் தற்கொலை இன்றைக்கு ஏறக்குறைய 5 லட்சம் வரை நெருங்கி விட்டது. மகாராஷ்டிரம் விதர்பாவில் பருத்தி விவசாயிகள், கரும்பு விவசாயிகள் ஆந்திரத்திலும் துவக்கத்தில் விவசாயிகள் இந்த கொடிய நிலைக்கு தள்ளப்பட்டு மரணித்தனர் என்பது வேதனையான விடயம்.
தமிழகத்தில் 2012ல் விவசாயிகள் தற்கொலை ஆரம்பித்து இதுவரை 250 பேர் தற்கொலை, மனவேதனையால் மடிந்துள்ளனர். ஏற்கனவே துப்பாக்கிச்சூட்டில் 1972ல் இருந்து 1992 வரை 60 விவசாயிகள் அரசின் ஏவல் துறையான காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உச்ச நீதிமன்றம் இதை குறித்து வேதனையோடும் அக்கறையோடும் விவசாயிகளினுடைய தற்கொலையும் மரணங்களும் நடக்கின்றன என்று மத்திய அரசைப் பார்த்து கடுமையான கேள்விகளையும் கண்டங்களையும் எழுப்பியுள்ளது.
இப்படியான நிலைமையில் விவசாயிகளுக்கு என்றைக்கு வாழ்வில் அமைதியும் நிம்மதியும் திரும்புமோ?
#விவசாய_தற்கொலை
#Farmers_Suicide
#KSRPOSTING
#KSRADHAKRISHNAN_POSTING
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
03.02.2017
No comments:
Post a Comment