Wednesday, February 8, 2017

சசிகலா vs ஓ.பன்னீர்செல்வம்

சசிகலா vs ஓ.பன்னீர்செல்வம்.  

தமிழக அரசியல் இத்தகைய அவல நிலைக்கு  தள்ளப்பட்டு இருக்கின்றது என்பதை யோசிக்கும் போது மிகவும்  வேதனையாக உள்ளது. 

காமராஜர் - அண்ணா இருவரும் நேருக்கு நேர் களம் கண்ட தமிழ்நாடு இது. மூதறிஞர் இராஜாஜியும் தந்தைப் பெரியாரும் கைகோர்த்து களம் கண்ட தமிழ்நாடு. எத்தகைய சமூக நீதி சிந்தனையாளர்களை எல்லாம் , மொழி ஆளுமைகளை எல்லாம் தன்னகத்தே அடக்கி வைத்திருந்த தமிழ்நாடு. 

தலைவர் கலைஞரும் , மா.பொ.சி அவர்களும் அரசியல் பேசினால் தமிழ் மணக்கும்.. மொழிவளம் மிகுந்து காணப்படும்.  இவ்வாறாக நாங்கள் அரசியல் கற்ற தமிழ்நாடு இன்றைக்கு கொள்கை, கோட்பாடு, சமூகநீதி, மொழிவளம் என ஒன்றும் அறியாத  சசிகலா, பன்னீர்செல்வம் எனும் பதவி ஆசை பிடித்தவர்களை காட்டி  இவர்களில் யார் சிறந்தவர் என   நம்முன் வைக்கப்படும் கேள்வி எத்தகையது எனில் மண் குதிரை , காகித கப்பல் இரண்டையும் காட்டி எதன் மீது பயணம் செய்யப் போகிறார் என்பதற்கு ஒப்பானது. 

 இருவரையும் ஒப்பிடும் போது திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் அனைவருமே இவர்கள் இருவரை விட மேலானவர்கள்.. அவர்களின் வெற்றிக்கு பின்னால் சமூகநீதி பார்வை, மொழிப்போர் என பின்னணியை கொண்டவர்களாக இருப்பர். 

எனவே மாண்புமிகு செயல் தலைவர் நடப்பது அதிமுகவின் உட்கட்சிப் போர் என வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நமக்கான களத்தை தயார் செய்வது சிறப்பு.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...