எனது கிராமமான
குருஞ்சாக்குளத்தில்
கிராபைட்ஆலை அமைப்பதை எதிர்த்து அதற்கு என்ன விதமான நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை நடத்தலாம் என கிராம மக்களை சந்தித்து நேற்று (10-3-2024) நள்ளிரவு வரைவிவாதித்த போது
எனது கிராமத்தில் இன்று (11-3-2024) காலை எனது நஞ்சை புஞ்சை நிலங்களை பார்வையிடச் சென்றபோது
••••••••
*குருஞ்சாக்குளம் கிராமத்தில் கிராபைட் வெட்டி எடுப்பதற்கு இ-டெண்டர் விடுப்பட்டுள்ளதை நிறுத்தி விவசாய நிலங்களை மத்திய, மாநில அரசுகள் காக்கவேண்டும்
*வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது*
கோவில்பட்டியில், இன்று , 11-3-2024 நான் செய்தியாளர்களிடம் பேசுகையில்
1)தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமம் குருஞ்சாக்குளம். இங்கு, கிராபைட் எடுக்க இ-டெண்டர் விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து எங்கள் ஊரில் ஊர்க்கூட்டம் நடத்தினோம். பிறந்த இடமான இங்கு தாய், தந்தையர் வாழ்ந்த மண். எப்படி இந்த ஊரைவிட்டு செல்வது என்று மக்கள் வேதனைப்பட்டார்கள். 10க்கும் அதிகமான கிராமங்கள் இருக்காது.
கழுகுமலை, கரிசல்குளம், விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை வரையும், குருவிகுளம், நக்கலமுத்தன்பட்டி வரை மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த திட்டம் வந்தால் தென்காசி, துாத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்ட எல்லைப் பகுதி கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.
கோவில்பட்டி வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். இதற்குமுன் ஆங்கிலயர் ஆட்சி காலத்தில் 1924ம் ஆண்டு குருஞ்சாக்குளத்தில் கிராபைட் ஆய்வு நடந்தது. எங்கள் ஊரில் நீராவிகுளத்தில் தோண்டி பார்த்தபோது, அதில் கிராபைட் தொடர்பான காக்கா பொன் என்ற தாதுமண் உள்ளது.
1963-64இல் பக்தவச்சலம் முதல்வராக இருந்தபோதும், 1999இல் கலைஞர்முதல்வராக இருந்தபோதும் என 3 முறை கிராபைட் எடுப்பது தடுக்கப்பட்டது. ஆனால், இப்போது இந்த திட்டத்துக்கு இ-டெண்டர் விடப்பட்டுள்ளது.
திட்டம் நிறுத்தப்படும் என்பது தெரியாது. போராடித்தான் ஆகனும். தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பது, திருவேங்கடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, கோவில்பட்டியில் அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து, கிராபைட் எதிர்ப்பு மாநாடு நடத்துவது என்று 3 கட்டமாக போராட்டம் நடத்தவேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.
அதுபோல், வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் முடிவு செய்து உள்ளேன்.
2)கோவில்பட்டி தொழில் கேந்திர தலம். இங்குள்ள ரயில்வே ஸ்டேஷனில் இறங்கித்தான், மக்கள் சங்கரன்கோவில், துாத்துக்குடி, விளாத்திகுளம், கயத்தார், திருவேங்கடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்கின்றனர்.
ராமாயணத்தில் கூட கோவில்பட்டி இடம்பெற்றுள்ளது. கழுகமலையிலும், கோவில்பட்டியிலும் ராமர் பாதம் பதித்த தடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. கோவில்பட்டி தனி மாவட்டம் ஆகவேண்டியது காலத்தின் அவசியம்.
தென்காசி மாவட்டத்தில் திருவேங்கடம், விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை ஒன்றியம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், சாத்துார் சட்டசபை தொகுதிகளையும் எல்லையாக கொண்டு அமைக்கப்படவேண்டும்.
கடந்த ஆண்டு வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் அறிவித்தார். இந்த ஆண்டு ஏன் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. ஏன் புறக்கணிக்கப்படுகிறது என்று தெரியவில்லை.
ராஜபாளையம் மற்றும் கோவில்பட்டி நன்கு வளர்ச்சி அடைந்திருக்கவேண்டிய நகரங்கள். அரசுகள் கவனிக்க தவறியதால் வளர்ச்சியடையவில்லை. கோவில்பட்டியில் விவசாயம், தொழில் உள்ளிட்ட எல்லா வசதிகளும் உள்ளது.
3)கோவில்பட்டியில், விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவுக்கு முழு வெண்கல சிலை அமைக்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தோம். அரசு இடத்தில் சிலை வைக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உள்ளதால், கோவில்பட்டியில் எனக்கு சொந்தமான 2 இடங்கள் உள்ளது. அதில், ஒரு இடத்தை தேர்வு செய்து சிலை வைக்க உள்ளோம்.
4)தென்காசி மாவட்டத்தில் உள்ள இளையரசனேந்தல் பிர்க்காவை கோவில்பட்டியில் இணைக்கவேண்டும். இங்குள்ள மக்கள் காலை 6 மணிக்கு புறப்பட்டால்தான் பகல் 11 மணிக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்லமுடியும். மக்கள் அவதிப்படுகிறார்கள். உடனடியாக, இளையரசனேந்தல் பிர்க்காவை துாத்துக்குடி மாவட்டத்தோடு இணைக்கவேண்டும் என்றார்.
இதில் தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ரெங்கநாயகலு, வழக்கறிஞர் அய்யலுச்சாமி, தேசிய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்
சுரேஷ்குமார், ஊடகப்பிரிவு தலைவர் புருஷோத்தமன், ஆடு வளர்ப்பு பிரிவு தலைவர் கருப்பசாமி, தூத்துக்குடி மாவட்டத் துணைத் தலைவர் ஞானமூர்த்தி, கழுகுமலை ராஜேந்திரன், தமோதரக் கண்ணன் ஷத்திரிய ஜன சேவா ட்ராஸ்ட் தலைவர்அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
#கிராபைட்_குருஞ்சாக்குளம்
#Graphite_kurunjakulam
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
11-3-2024.
No comments:
Post a Comment