Wednesday, March 27, 2024

இன்றைய அரசியல்…

முக நூலில் இந்த பதிவை வாசித்த பின்…
வேட்பாளர்  பட்டியல்  வந்ததிலிருந்து என் மன ஓட்டத்தில்  இருந்ததை பிரதிபலிக்கிறது . சுமார்  80 % இடங்களில்  ஒவ்வொரு  கட்சிக்கும் பங்கீடு செய்து  வெற்றி  நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
•••••••
Muru Theivasegamani

நேற்று முந்தினம் ஊட்டியில் வேட்புமனு தாக்கலின்போது போலீஸ் தடியடியில் தலையில் அடிபட்ட பாஜக தொண்டர், மூளையில் ரத்த கசிவின் காரணமாக உயிரிழந்தார். உடனே நாம் போலீஸின் மீதும் ஆட்சியாளரின் மீதும் கோபப்படுவோம்! தொண்டர்கள் ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டு சாவோம். ஆனால் தமிழகத்தில் தேர்தலில் யார் ஜெய்க்க வேண்டும், யார் தோற்க வேண்ட என்று முடிவுகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. கனிமொழி முதல் கார்த்திக் சிதம்பரம் வரை பாஜக அவர்களுக்கான வெற்றியை ஏற்கனவே கிஃப்டாக கொடுத்துவிட்டரு, அதை எடுத்துக்கொள்வது மட்டுமே அவர்கள் திறமை. இதை விரிவாக எழுதுகிறேன்..

பாஜக 15 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும். அடுத்த நிலையில் திமுக, அதற்கடுத்து அதிமுக. கிட்டத்தட்ட எந்த தொகுதியில் யார் ஜெய்ப்பார்கள் என்பதை திட்டவட்டமாக நம்மால் சொல்ல முடியும்..

இன்று நான் சொல்வதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இந்த தேர்தலுக்கு பின்பு தமிழகத்தை கொள்ளை அடித்த திமுகவின் கோலமால்புர குடும்பத்தின் வீழ்ச்சி தொடங்கும். கோல்மால்புர குடும்பம் முதல், காந்தி குடும்பம் வரை யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள். ஆனால் அவர்கள் பேருக்கு அரசியல் செய்துவிட்டு, மோடியிடம் சத்தமில்லாமல் சரண்டர் ஆகிவிட்டு போவார்கள்.

இதில் ஒருசில தலைவர்கள் கட்டுக்குள் வராதபோது, அவர்கள் மீது சட்டம் பாயும்! அவர்கள் செய்த ஊழல்களால், சுற்றிவளைக்கப்பட்டு சூழ் நிலை கைதிகள் ஆவார்கள். 

என்வே அரசியலில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட தேர்தலுக்கு நாம்தான், நம் உழைப்புத்தான் வெற்றியை தீர்மானித்தது என்று உங்கள் உழைப்பை, பணத்தை, நேரத்தை செலவிடாதீர்கள்.

மோடி நல்ல தலைவர், ஊழல் செய்யாதவர், நாடுக்கு பல முன்னேற்றங்களை கொடுப்பார். ஆனால் அவர் சொல்லியது போல ஊழல் தலைவர்களை தண்டிப்பார் என்றெல்லாம் எதெபார்க்க வேண்டாம். ஆனால் வருங்காலத்தில் ஊழல்கள் குறைந்து, வளர்ச்சி பெருகி நல்லாட்சி மலரும். 

எனவே தவறாமல் ஊழலற்ற, நல்ல கட்சிக்கு, நல்ல தலைவர்க்கு, நல்ல வேட்பாளர்க்கு தவறாமல் வாக்களியுங்கள்!

நாம் உழைக்காவிட்டால் நம் குடும்பம் கரைசேராது என்பதை புரிந்துகொண்டு, தேவையில்லாமல் அடிபட்டு சாகாதீர்கள். 

இந்த நேரத்தில் ஊட்டியில் இறந்த பாஜக தொண்டனுக்கு மட்டுமல்ல அர்சியலில் கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் அப்பாவி ரொண்டனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை என்பது அதை புரிந்துகொண்டு தவறு செய்யாமல்.தவிர்ப்பதே! 

விரிவாக எழுதுகிறேன் ✍🏼🔗👇🏽
facebook.com/share/p/PZziTR…
🐶
#Indhea

அரசியல் தலைவர்கள் ரகசிய தேர்தல் உடன்பாடு!  தொண்டர்களே, அடிபட்டு சாகாதீர்கள், முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள்!

No comments:

Post a Comment