Tuesday, March 19, 2024

There is a will there is a way.. தப்பிக்காதீர்கள், தேடாதீர்கள். ஆனால் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்ற உண்மையை எதிர்கொள்ளுங்கள்.

There is a will there is a way..

தப்பிக்காதீர்கள், தேடாதீர்கள்.
ஆனால் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்ற உண்மையை எதிர்கொள்ளுங்கள். 

நம்மிடம் ஒரு கோட்பாடு உள்ளது; ஒரு நம்பிக்கை, ஒரு கருத்து, ஒரு சூத்திரம் உள்ளது - ஒரு உண்மை இருக்கிறது, பேரின்பம் இருக்கிறது, சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒன்று இருக்கிறது என்று. நாம் அதை ஒரு இலக்காக, ஒரு இலட்சியமாக, ஒரு திசையாக நிர்ணயித்துக்கொண்டு, அந்த திசையில் நடக்கிறோம்.

நீங்கள் ஒரு குறிப்பிட்ட திசையில் நடக்கும்போது அல்லது சிந்திக்கும்போது, உங்கள் மனதில் இடம் இருக்காது. ஏனென்றால் உங்கள் மனம் பற்றுதல்களாலும், அச்சங்களாலும், இன்பங்களைத் தேடுவதாலும், பதவி, அதிகாரம் என்ற ஆசைகளாலும் நிரம்பி வழிகிறது.

இடம் அவசியம்.
முழு கவனம் இருக்கும் இடத்தில் திசை இல்லை. எனவே, இடம் உள்ளது.

நீங்கள் இந்த உண்மையைப் பார்த்தால் - அதன் வாய்மொழி விளக்கத்தை அல்ல - ஆனால் விவரிக்க முடியாத உண்மையை பார்த்தால் - பிறகு மனம் அசைவற்று இருக்கும்; அமைதியாக இருக்கும்.

அமைதியான மனம் என்பது அவசியம்.
அங்கிருந்து நீங்கள் தொடங்க முடியும்.

வாழ்க்கையில் சில பாடங் கள் உண்டு. அதை எல்லோரும் உணரும் கட்டம் வரும். சிலருக்கு வந்து போகும். பலருக்கு ஆறாத ரணங்கள் தரும். இங்கேயும் ஒரு சாதாரணமான மனிதனையும் ஏற்படும் சூழல் மாற்றி மாற்றி வைக்கிறது. 
நாம் ஒன்று நினைத்தால் வாழ்க்கை விளையாட்டில் போய்ச் சேருகிற இடம் வேறு ஒன்றாக இருக்கிறது. எவ்வளவோ கஷ்டங்கள் அனுபவிக்கிறோம், சிக்கல்களிலிருந்து விடுபட தவிக்கிறோம். இத்தனைக்கும் நடுவில் தாமரை இலைத் தண்ணீர் போல இங்கேயுள்ள வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை இருக்கிறதே அது தான் தன் நம்பிக்கை வாழ்க்கை.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...