#*மதிமுகவின்
பம்பரச்சின்னம் வரலாறு*
————————————
மதிமுக துவங்கப்பட்ட உடனே
மயிலாப்பூர் மற்றும் பெருந்துறைக்கான இடைத்தேர்தல் நடந்தது. அதில் மயிலாப்பூருக்கு பஸ் சின்னமும் பெருந்துறைக்குப் பம்பரச் சின்னமும் ஒதுகப்பட்டது.
கடந்த 1996 நாடளுமன்ற மற்றும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் 180 இடங்களில போட்டியிட்டு மதிமுக, வைகோ ( விளாத்திகுளம்), அடியேன் (கோவில்பட்டி) தங்கவேலு (சங்கரன்கோவில்) சட்ட பேரவை முன்னாள் துணை தலைவர் வேடசந்தூர் பாலசுப்பிரமணியம் என நான்கு பேரும் மட்டும் டெபாசிட் வாங்கினோம். இதில் எனக்கு அதிக பட்சமாக வாக்குகள் கிடைத்தன. அந்த தேர்தலில் மதிமுகவுக்கு என குடைச்சின்னம் அணைத்து தொகுதிகளும் வழங்கப்பட்டிருந்தது
பின் தேர்தல் முடிவுகள் படி தேர்தல் ஆணையம் மதிமுக அங்கிகாரம் ரத்து செய்து குடைச்சின்னமும் முடக்கப்பட்டு விட்டது. 1998 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே வைகோவும் நானும் டெல்லிக்குச் சென்று அங்கேயே தங்கி இருந்து தேர்தல் கமிஷனரிடம் முட்டி மோதி பேசிப் இந்தப் பம்பரச் சின்னத்தை வாங்கினோம்.
கிட்டத்தட்ட இரண்டு வாரம் நான் 1998 டெல்லியிலேயே அசோகா யாத்திரா நிவாஸில் தங்கி இருந்தேன். வைகோ புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி (அன்று அவர் எம்பி) வீட்டில் தங்கினார்.
தேர்தல் ஆணையரின் எம்.எஸ்.கில் அலுவலகத்திற்கு தினமும் போய் அவருடன் அமர்ந்து பேசிவிட்டு தேநீர் அருந்தி வருவேன். பிறகு ஒரு கட்சி இரண்டு மூன்று தொகுதிகளுக்குமேல்தனது தனது வேட்பாளர்களை நிறுத்தினால் ஒரு குறிப்பிட்ட சின்னத்தை அவர்களுக்கு வழங்கலாம் என்று ஒரு சிறப்பு உத்தரவை ஆணையர் பிறப்பித்தார். இதுதான் பம்பரச் சின்னத்திற்கான வரலாறு. இதற்கு வழக்கறிஞர்கள் முன்னள் மத்திய சட்ட அமைச்சர் சாந்திபூஷன், பிரசாந் பூஷன்
ஆலோசனையும் வழங்கினர்.
பெருந்துறை இடைத்
தேர்தலில் பெற்ற சின்னம் கிடைத்தால் நல்லது மு. கண்ணப்பன் என சொன்னார்
அப்படி அரும்பாடு பட்டு வாங்கி வந்த பம்பரச் சின்னத்தில் வட சென்னை வேட்பாளராக நான் நிற்கவும் வாய்ப்பு இருந்தும் எனக்கு கிடைக்காமல் போய்விட்டது. இப்போது அந்த சின்னமே பிரச்சனை.
ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுபவர்களுக்கு தனி சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்த நிலையில், பம்பரம் சின்னம் கோரி மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
••••
*"பம்பரம் சின்னம் வழங்க உத்தரவிட முடியாது”*
ஒரு தொகுதிக்காக பொது பட்டியலில் உள்ள பம்பரம் சின்னத்தை மதிமுகவுக்கு வழங்க சட்டவிதிகள் இல்லை என தேர்தல் ஆணையம் வாதம்.
வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் இந்த வழக்கிற்கு தீர்வு காண இயலாது.
2010ஆம் ஆண்டு மதிமுக அங்கீகாரத்தை இழந்துவிட்டது- நீதிபதிகள்.
தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. It is only because of commissions and omissions of Mr Vaiko from 1998…..
போகட்டும் ஊழ்வினைகள் வந்து உறுத்து ஊட்டத் தானே செய்யும்.
#மதிமுகவின்_பம்பரச்சின்னம்
#mdmktopsymbol #mdmk
#ksrpost
#கேஎஸ்ஆர்post
25-3-2024.
No comments:
Post a Comment