Wednesday, March 6, 2024

திருமாலிருஞ்சோலை- பழமுதிர்சோலை என்னும் அழகர் கோயில்

திருமாலிருஞ்சோலை-  பழமுதிர்சோலை என்னும் அழகர் கோயில் ராஜகோபுரம் தாண்டியவுடன் நம்மை வரவேற்பது கல்யாணமண்டபம் . இந்த மண்டபத்தை கட்டியது இரு அரசர்கள் கிருஷ்ணப்பர் மற்றும் விஸ்வநாதர் என்று குறிப்புகள் உள்ளது .( நன்றி 1965  ல் வெளிவந்த  திருமாலிருஞ்சோலை மலை ஸ்ரீ கள்ளழகர் கோயில் வரலாறு ) .இதில் கிருஷ்ணப்பர் என்பவர் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரா அல்லது விஸ்வநாத நாயக்கருக்கு பிறகு பட்டத்திற்கு வந்த முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கரா ? . பொதுஆண்டு 1529 முதல் 1564 - சுமார் 35 ஆண்டுகள் ஆண்ட விஸ்வநாத நாயக்கர் போற்றுதலுக்குரியவர் . 207 வருடங்கள் இருந்த மதுரை நாயக்கர் ஆட்சிக்கு இந்த 35 ஆண்டுகள் பலத்த அஸ்திவாரமாக இருக்க வேண்டும் . சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இன்றும் புது பொலிவுடன் இருக்கும் இந்த மண்டபம் ,அதன் கலைத்திறன் மிக்க சிலைகள் விஜயநகர மற்றும் மதுரை நாயக்கர் கால சிற்ப திறன்களுக்கு எடுத்து காட்டு.  அழகர் கோயிலும் , விஜயநகர /மதுரை நாயக்கர் தொடர்புகள் என்று  ஒரு ஆராய்ச்சியே பண்ணலாம் . -

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...