Friday, March 22, 2024

#சிலகசப்பான உண்மைகள்-கோபப் படும் நேரத்தில் கோபப் படவில்லை …. அந்த நிலையில் பேசவில்லை என்றால் கோமாளிகளாக ஆக்கிவிடுவார்கள் நம்மை..

#சிலகசப்பான உண்மைகள்-கோபப் படும் நேரத்தில் கோபப் படவில்லை …. அந்த நிலையில் பேசவில்லை என்றால் கோமாளிகளாக ஆக்கிவிடுவார்கள் நம்மை.. ———————————————————



#மனதிலுறுதிவேண்டும்,
#வாக்கினிலேயினிமைவேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்-#பாரதி 
••••
கோபப் படும் நேரத்தில் கோபப் படவில்லை …. அந்த நிலையில் பேசவில்லை என்றால் கோமாளிகளாக ஆக்கிவிடுவார்கள் நம்மை.. 

இந்த பதிவு ஆதங்கத்தில் எழுதப்பட்டது அல்ல 
ஒவ்வொருவரும் சுயநல வாழ்கையில் எதையோ நோக்கி ஓடுராங்க....... தொடங்கிய இடமும் தெரியல சேர போர இடமும் தெரியல.. 

இது உண்மைகளை சொல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில் எழுதப்பட்ட பதிவு. 1998 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக உடனான மதிமுகவின் கூட்டணியில் வடசென்னை தொகுதியை எனக்கு என்று ஒதுக்கினார்கள். அப்போது அதிமுக சார்பாக வட சென்னை தொகுதிக்கு என்று அறிவிக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரை மாற்றி அந்த இடத்தை எனக்கு தருவதாகப்பேச்சு.
ஜெயலலிதா அவர்களும் வட சென்னைத் தொகுதியை கே எஸ் ராதாகிருஷ்ணனுக்கு  கொடுத்துவிடுங்கள் என்று சொல்லித்தான் வைகோவிடம் தொகுதிப் பங்கீட்டை ஒப்படைக்கிறார்.

அதன்பின்தான் வைகோவின் கோளாறு மனம் வேலை செய்கிறது. முடிவில்  ஒரே சாதியைச் சார்ந்த நாயுடுகள் இருவருக்கு எப்படி வாய்ப்பு கொடுக்க முடியும் என்று கேட்டு எனக்கான அந்த வாய்ப்பை வைகோ மறுத்தும்  ஒத்தியும் வைத்தார். ஒரே சாதி என என்னை ஒதுக்கிய வைகோ தன் மகனையே கொண்டு வந்து விட்டார். இதில் உள்ள logic - அவரின் நேர்மை புரியல⁉️

தகுதியும் திறமையும் முக்கியமா? சாதி முக்கியமா? ஒரே சாதி என்று ஒருவரை தள்ளி வைக்க முடியுமா?  இப்படியான அற்பத்தனமான முடிவுகள் என சிலர் அப்போது இது குறித்து கேட்டதுண்டு. மதிமுகவிலிருந்ததை நான் சுட்டிக் காட்டத்தான் வேண்டும்.
இது உண்மையில் நடந்தது. மிக சத்தியமாக என் தாய் மீது ஆணையாக  நடந்தது. 

 இதற்கு சாட்சியாக வெறும் சாட்சியாக மட்டும் இல்லாமல் மனசாட்சியாக இருந்தவர்கள் இருக்க வேண்டியவர்கள்
 மதுராந்தகம் ஆறுமுகம்,எல்  கணேசன் முன்னாள் அமைச்சர்கள்  கண்ணப்பன் செஞ்சி ராமச்சந்திரன்
பத்திரிகையாளர்கள் பி டி ஐ ராமசாமி அன்றைய இந்து ஆங்கில பத்திரிக்கையின்  கணபதி, தினமணி இன்றைய ஆசிரியர் கே. வைத்தியநாதன், கல்கிப் பிரியன் மை பா நாராயணன் போன்றவர்கள் பலரும்தான்.

அதற்குப் பின் வைகோ   நடந்தது கொண்டதெல்லாம் மறக்கவோ முடியாத செயல்பாடுகள். நான் கேட்கிறேன் அதே நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களை இருவரை வேட்பாளர்களாக திண்டிவனத்திலும் என்னிடம் பறித்த வடசென்னையிலும் போட்டியிட எப்படி வாய்ப்புத் தந்ததாராம் அந்த நல்ல வைகோ.

அதேபோல் 1999 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே சாதியைச் சேர்ந்த இருவரைப் பழனியிலும் திருச்செங்கோட்டிலும் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட வாய்ப்பு தந்ததும்தான் வைகோவின் அடிப்படை நேர்மையா?
ஒரு கண்ணுக்கு  வெண்ணெய் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு. அப்படிப்பட்டவர் தான் வைகோ.

1998 இல் நாடாளுமன்ன வேட்பாளர்கள் பட்டியல் அறிவித்தவுடன் ஜெயலலிதா அவர்கள் என்னை அழைத்து வடசென்னை தொகுதியை உங்களுக்குத்தானே கொடுக்கச் சொல்லி வைகோவிடம் சொன்னேன். அதற்காகத்தானே ஜெயக்குமாரை கூட வேறு தொகுதிக்கு மாற்றினோம். ஏன் உங்கள் பெயர் இல்லை.
எனக்கு உங்களைத் தானே நன்றாக தெரியும் . ஈழ விவகாரத்தில் பிரபாகரனை  என்னிடம் அழைத்து வந்து சந்திக்க வைத்தீர்கள் ! உங்களுக்கு அந்த தொகுதியை ஒதுக்குவார் என்று தான் நான் கூட்டணி பேச்சு வார்த்தையில்  குறிப்பிட்டு இருந்தேன்! ஏன்அவர் உங்களுக்கு கொடுக்கவில்லை? என்று கோபமாக் கேட்டார் நான் வேறு ஒன்றும் சொல்லத் தோன்றாமல் அதை அவரிடம் தான் கேட்க வேண்டும்  என்று சொன்னேன். 

இதுகுறித்து  அதிமுக தொகுதி பேச்சு வார்த்தை குழு தலைவர்,தமிழக சட்டப்பேரவை தலைவராக இருந்தவர் சேடப்பட்டி முத்தையா அப்போது அதிமுகவில்  பொருளராக இருந்தார் பிறகு திமுகவிற்கு வந்தார் .  அவர் என்னிடம்  “அம்மா தனிப்பட்ட முறையில் மிகவும் சங்கடப்பட்டார்” நீங்கள் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என்று தானே விருப்பப்பட்டு அந்த தொகுதியை விட்டுக் கொடுத்ததாக சொன்னார்! பிறகு ஏன் இப்படி ஆகிவிட்டது உங்களுக்கு ஏன் அந்த சீட் கொடுக்கப்படவில்லை எனக் கேட்டார்.

அப்போது சென்னை பூந்தமல்லி சாலையில் உள்ள ப்ரீஸ் ஹோட்டலில் ரம்ஜான் விருந்துக்கு வந்த ஜெயலலிதா அங்கே வந்திருந்த வைகோவுடன் முகம் கொடுத்து கூடப் பேசாமல் கொண்டு போய்விட்டார்.
 
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அன்று சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பிரச்சாரத்திற்கு சென்ற ஜெயலலிதா அவர்கள் வடசென்னை பிரச்சாரத்திற்கு மட்டும் வரவே இல்லை.

இதற்கும் பிறகு 2001 இல் திமுக மதிமுக கூட்டணி அமைய வைகோவை கலைஞருடன் பல பேச்சுவார்த்தைகளுக்கு அப்பால் நான் சந்திக்க வைத்தேன். அச்சந்திப்பு நிறைவேறிய போது நடந்த ஒப்பந்த அளவுகள் என்ன அதன் பின் வைகோ தன்னிச்சையாக வெட்டிய மர்மம்தான் என்ன. இன்றைக்கு வரைக்கும் அந்த மர்மத்திற்கு விடை இல்லை. இணைத்து வைத்தவன் இங்கிருக்க கூட்டணியில் தவறாமல் மதிமுக எப்படியும் இடம் பெற்றுவிடுகிறது. . இந்தக் கூட்டணியை 2001 இல் நான் சந்திக்க வைத்து பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த போது இன்றைய முதல்வர் ஸ்டாலினுக்கு சுத்தமாக அது பிடிக்கவில்லை. அன்று மதிமுகவுக்கு 21 சட்டமன்ற தொகுதிகள் என கலைஞர் வைகோ ஒப்பந்தம் கையெழுத்தானது . தீடிர் என வைகோ சங்கரன்கோவில், சங்கிரி, சேரன்மாதேவி தொகுதிகளை பிரச்சனைகளை சொல்லி தேவையில்லாமல் ஏதோ தவறான நோக்கில் ஒப்பந்த்தை முறித்தார்.

பின், திண்டுக்கல் மண்டல திமுக மாநாட்டில் கலைஞரை பார்த்து வைகோ
அழுத்து ஏன் என தெரியல. இப்படி பல சம்பவங்கள் உண்டு. இப்படி அழுவம் கலைஞர் மீதுபாசம் என்ற நவரசமான நிகழ்வுகள்….பின கலைஞரின் கோபாலபுரத்துக்கு எங்கள் சாம்பல கூட 
போகாது என வைகோ சொன்னார். இப்படி பல எதிர் மறை வேடிக்கை காட்சிகள்.

பின்பு, என் முயற்சில் கலைஞரை வைகோவிடம் பேச வைத்து 2016 சட்ட மன்ற தேர்தலில் திமுக- மதிமுக கூட்டணி என்ற நிலையில் இருந்த போதும் தீடிர் என மக்கள் நல கூட்டணி என்று வைகோ 2001 மாதிரி திரும்பவும் வெட்டி விட்டு சென்றார். இன்றைய முதல்வர் ஸ்டாலினை வைகோவின் அண்ணா நகர் வீட்டிற்க்கும் கலைஞரின் விருப்படி அழைத்தும் சென்றேன்.  இருந்தும 2009 ஈழப்பிரச்சனை, வாரிசு அரசியலுக்கு எதிரான நான் திமுக கூட்டணியில் இருக்க முடியது என்று கூறி தன் லாபத்துக்கு வெளியேறினார். அப்போது நான்தான் வைகோவின் தப்பு தாளங்களுக்கு  கலைஞரின் கோப பார்வைக்கு ஆள் ஆனேன். ஸ்டாலினும் என்னை குத்தி காட்டியதும் உண்டு.

வாரிசு அரசியல் கூடாது. கட்சியின் முடிவுகளுக்கும் வாரிசுகளுக்கும் சம்பந்தமில்லை.
 கட்சிக் கொள்கையின் அடிப்படையிலான ஆட்சி முறை வேண்டும் என்றெல்லாம் உரக்கப் பேசி மேடைகளில் முழங்கிய வைகோ இன்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து  கூட்டணியில் எப்படி  மகனுக்கு மட்டும் இடம் கேட்டு அதைப் பெற்றுவிடுகிறார். மாமனிதர் வைகோ அந்த மாமனிதர் படத்தில் எனக்கு இடமில்லை.

ராமாயணம் பேசுவார் மகாபாரதம் பேசுவார் கிரேக்க தத்துவங்களை எல்லாம் பேசுவார். பேசியவர் இன்று அந்தப் பங்காளிகளுக்கு அருகில் போய் வசதியாக அமர்ந்துகொண்டார்.

வளரட்டும் வாழட்டும் வைகோவின் குடும்பங்களும் வாரிசுகளும் பிள்ளைகளும் குட்டிகளும். அன்று வாரிசு அரசியல் எதிர்ப்பு இன்று வாரிசு அரசியல் ஆதரவு

“தன்வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும்”

இப்படி எனக்கு பல வாழ்க்கை பாடங்கள

வாழ்க்கையில் எதுக்கும் கவலைப்படாதீங்க.

இழந்தது ஏதாவது ஒரு ரூபத்தில் இன்னும் அழகாக உங்களுக்கு திரும்பி வரும்.

இப்படி; நமது களங்கள் - தளங்கள் இழந்த உழைப்புகள், சொத்து, பணம், உறவுகள், வசதிகள் இழந்தது  எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக திரும்பி வரும்என்று உறுதியோடு நம்புங்கள்.

நிம்மதி கூட திரும்பி வரும். Most precious.

இழந்ததை நினைத்து வருந்தி கொண்டே இருந்தால், சிந்தனைகள் தெளிவாக இருக்காது. இலக்கு புரியாது. மேலும் மேலும் இழப்புதான்.

நடந்தது எல்லாம் நன்மைக்கே என்று கூறுவார்களே. அது உண்மையான கூற்று

போனது போச்சு. இனி நடக்கறதை நல்லதா இருக்கட்டும் என்று மனதை திருப்பி விட்டால், நிறைய சந்தர்ப்பங்கள் நமக்கு தென்படும்.

ஆழ்மனதிலே இந்த Knot ஐ நன்றாக 
பதிய வையுங்கள்.

எதை இழந்தோமே, அதைவிட பல மடங்கு அழகாக சிறப்பாக திரும்பி நமக்கு வரும்.

இது பலர் அனுபவம். நம் வாழ்க்கையையே திரும்பி பார்த்தால், இது போன்ற நிகழ்வுகள் கண்டிப்பாகஇருக்கும்.விட்டதை விட சிறப்பாக பிடித்து இருப்போம்.

திரும்ப திரும்ப எண்ணும் எண்ணங்கள் செயலாக கண்டிப்பாக மலரும்.

#தகுதியேதடை

#தகுதியேதடை
#திமுக #dmk
#கலைஞர் #Kalaignar
#Stalin #ஸ்டாலின்
#அதிமுக #ஜெயலலிதா
#admk #Jayalalitha
#mdmk #vaiko
#மதிமுக #வைகோ
#TamilNaduElections
#tamilnadupoltics
#தமிழகதேர்தல்கள்
#தமிழகஅரசியல்
#சிலகசப்பான_அரசியல்உண்மைகள் 

#கேஎஸ்ஆர்போஸ்ட்

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
22-3-2024


1 comment:

  1. God is with U always my friend! Greetings from Sivan Tamil Temple/ Sivayogi Ashram Norway! WhatsApp groups World Harmony Forum/ United Gandhiyan Nations/ World Tamils Assembly +4791784271

    ReplyDelete

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...