Saturday, March 23, 2024

இங்குள்ள நிம்மதி மதிப்பற்றது… எங்கள் குலத்தொழில்…. விவசாயம்…

இங்குள்ள நிம்மதி மதிப்பற்றது…
எங்கள் குலத்தொழில்….
விவசாயம்…

தொல்காப்பியம் பொருளதிகாரம் 112ஆம் சூத்திரத்தில் "வேளாண் பெரு நெறி" என்ற வரி வருகிறது. இதற்கும் இளம்பூரணர் வேளாண் என்பது உபகாரம், பெரு நெறி என்பது உபகாரமாகிய பெரு நெறி என்றே விளக்கம் அளித்துள்ளார். அதாவது இந்த இரண்டு சூத்திரங்கள் மூலம் நாம் அறிவது என்னவெனில், வேளாண் என்ற சொல்லுக்கு விவசாயம் என்ற பொருள் தமிழர் வழக்கில் கொடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது. அதாவது இது உபகாரம் என்ற பொருளிலேயே கையாளப்பட்டுள்ளது. 

எட்டுத் தொகை நூல்களில் தலையாய நூலான கலித்தொகையில் ஒரு பாடலில் (101) வேளாண்மை செய்தன கண் என்று வருகிறது. அதாவது கண்கள் உபசாரம் செய்தன. கண்கள் உபசாரமாக செய்கை செய்தது என்ற பொருளே உரையாசிரிய மரபில் கூறப்பட்டுள்ளது. மேலும் நிகண்டுகள் என்ற சொல்லியல் தொகுதிகளிலும் வேளாண்மை என்ற சொல்லுக்கு விருந்தோம்பல் உபசரித்தல் என்ற பொருளையே வழங்குகிறது. 

#விவசாயம்_தமிழ்இலக்கியம்
#ksrpost
#23-3-2024.


No comments:

Post a Comment

உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…

  உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…