Tuesday, March 5, 2024

*அன்று 2ஜி சிக்கல்* *இன்று போதைப்பொருள்*..

*அன்று 2ஜி சிக்கல்* *இன்று போதைப்பொருள்*.. 
————————————

போதைக்கு எதிராக நடவடிக்கை நெருங்கிவிட்டது என முக்கிய டில்லி நண்பர சொன்ன  செய்தி … கென்யா நாடு முதல் பல இடங்களுக்கு சென்றது என சொல்கின்றனர்.



இரும்பு வியாபாரம் முதல் சினிமா வரை செல்கிறதாம்..மாவட்ட நிர்வாகி, டில்லி, தமிழக மக்கள் பிரதிநிதிகள் வரை  விரிகிறதாம். எப்படியும் உண்மை வெளிவரும்.. வரட்டும். உடன் இருந்த நல்லவர்களின் உழைப்பை பெற்ற நன்றியற்ற மனிதர்களை மீது அறச்சீற்றம் ஒரு நாள் பாயும்.





















இது இயற்கையின் நீதி..

உறுதுணையாய் இருந்த உற்றவர்களை விட்டுவிட்டு கால் பிடிப்போருக்கு எல்லாம் பதவிகளை தந்த திமுகவின் பாரபட்சமான செயலுக்கு ஊழ்வினை வந்து உறுத்தூட்டுகிறது.
 இன்றைக்கு வெளிவந்து கொண்டிருக்கும் பூதாகரமான போதைப் பொருள் விவகாரத்தில் அது பெரும் சிக்கலை சந்தித்துக் கபி(கலைஞர் பின்) திமுக கொண்டிருக்கிறது..

நேற்று வரை திமுகவை திட்டி மேடைகளிலும் எழுத்திலும் ஊடகங்களிலும் கேவலமாக வர்ணித்தவர்களுக்கெல்லாம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திமுகவில் சேர்த்து மந்திரி,எம்பி,எம்எல்ஏ என்று பதவிகளை அள்ளிக் கொடுத்தது திமுக.

அது ஒரு மோசமான செயல் என்றால் ஆண்டாண்டு காலமாக உழைத்துக் கொடுத்தவர்களை வெளியே நிறுத்தி வேடிக்கையும் பார்த்தது.

நியதிகளின் பண்பாட்டின் ஒழுக்கத்தின் அரசாட்சி என்றும் நிலையானது. அதற்குத் தக ஆட்சியாளர்கள் அமைய வேண்டும்.

நல்லவர்களை வஞ்சித்து விட்டு சுயநலக் காரர்களை அருகில் வைத்தால் இப்படித்தான் புற்றுக்குள் கருநாகப் பாம்புகள் குடியேறும்.

வினைப் பயனை யாரும் வெல்ல முடியாது. போதைப்பொருள் விவகாரம் திமுகவிற்கு மிகப் பெரும் பின்னடைவு. அன்று 2ஜி இன்று போதைப்பொருள்..

செய்றது போதைப்
பொருள் கடத்தல் .
இதுக்கே இவ்வளவு  photos பில்டப் . 




#திமுக #DMKFails

#ksrpost
5-3-2024.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...