Wednesday, March 13, 2024

*உழவர்பெருந்தலைவர் சி.நாராயணசாமி நாயுடு , அவர் மறைந்த கோவில்பட்டியில் சிலை*

#*உழவர்பெருந்தலைவர் சி.நாராயணசாமி நாயுடு ,
அவர் மறைந்த கோவில்பட்டியில் சிலை* 
————————————
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்கள் கடந்த 21.12.1984 ஆம் ஆண்டு சட்ட மன்ற பிரச்சரத்தில்; அவரின் ஆதரவு களம் கோவில்பட்டி பயணியர் விடுதியில் தங்கிஇருந்தபோது நள்ளிரவில் மறைந்தார்.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு நடத்திய போராட்டங்களில், பின்னும் இந்த கரிசல் பூமியில் மட்டும் 17 பேர் வரை விவசாயிகளை காவல்துறை துப்பாக்கி சூட்டில் 1992 வரை இறந்துள்ளனர்.

அவர் மறைந்த இடத்தில் உழவர் பெருந்தலைவர் அவர்களுக்கு நினைவு சின்னம் மற்றும் திருவுருவ சிலை அமைக்க, நான் பல தடவை மாறி மாறி அமைந்த பல்வேறு அரசுகளிடம் நேராக சந்தித்து கோரிக்கை மனுகள 2011 முதல் 2022 வரை கொடுத்தும் இதுவரை கோவில்பட்டி நகரில் அவருக்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில் எந்த நினைவு சின்னமோ அல்லது திருவுருவ சிலையோ தமிழக அரசு அமைக்க எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.







இந்த நிலையில்  நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கில் பொது இடத்தில் சிலைகள் நிறுவ அனுமதி இல்லை என்று கூறிவிட்ட நிலையில், கோவில்பட்டியில் எனது சொந்த இடத்தில் சிலை எழுப்ப, அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டுள்ளோம்

ஏற்கனவே, அய்யா நாராயணசாமி நாயுடு அவர்களின் மணிமண்டபம் கட்ட பலமுறை தேசிய விவசாயிகள் சங்கத்தின் சார்பாக பல்வேறு அதிகாரிகள் மற்றும் முதல்வர் அவர்களுக்கு மனு செய்து காலம்தான் கடந்து போய்உள்ளது. வெற்று வாக்குறுதிகளால் அரசியல்வாதிகள் ஏமாற்றியே வந்துள்ளார்கள். ஆகவே, இனியும் தாமதம் செய்யாமல்  எனது இடத்தில் திருவுருவ சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான குழு பின்னர் அறிவிக்கப்படும்.

திருவுருவ சிலை அமையும் இடத்தில் அயன் கடந்த 11-3-2024 காலை ஆய்வு பணி மேற்கொண்டேன். அப்போது தேசிய விவசாயிகள் சங்க தலைவர் வழக்கறிஞர் ரெங்கநாயகலு, சமூகஆர்வலர் அய்யலுசாமி, தேசிய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் சுரேஷ்குமார்,ஆடு வளர்ப்போர் சங்க மாநில தலைவர் கருப்பசாமி, இணைய தள மற்றும் ஊடக பொறுப்பாளர் புருசோத்தமன், கழுகுமலை வட்டார கம்மவார் சங்க தலைவர் ராஜேந்திரன், தொழில் அதிபர் தமோதரக்கண்ணன், ரமேஷ், அன்பழகன், விஜயபாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

#உழவர்பெருந்தலைவர்நாராயணசாமிநாயுடுசிலை 
#கோவில்பட்டி #kovilpatti

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
13-3-2024.

கோவில்பட்டி நியூஸ்
KOVILPATTI EXPRESS NEWS
Kovilpatti news நம்ம கோவில்பட்டி


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...