Thursday, March 28, 2024

கணேச மூர்த்திகள் ….. பெண்கள் பொது வெளியில் தேவையற்று சிரிக்க கூடாது .ஆண்கள் பொது வெளியில் அழக்கூடாது.

தண்ணீர் விட்டா வளர்த்தோம் ? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்!  பெண்கள் பொது வெளியில் 

தேவையற்று சிரிக்க கூடாது .ஆண்கள் பொது வெளியில் அழக்கூடாது.

இது ஒரு மரபு இந்த மரபு ஏன் பாதுகாக்கப்படுகிறது என்றால் இந்த இரண்டிலுமே சமூகம் சந்தித்த கோளாறுகள் அதிகம்.

மிகுந்த அனுபவங்களுக்கு பிறகு தான் இத்தகைய முடிவுகள் மக்கள் மத்தியில் பேசப்படுகின்றன.

  மதிமுகவின் ஈரோடு கணேச மூர்த்தி அவர்களின் மறைவிற்கு வைகோ குலுங்கி அழுகிறார். சரிதான் … துயரம்

எதற்கு இந்த அழுகை ?என்ன அப்படி துக்கம் பற்றிப் பரவுகிறது. உங்கள் ஏற்பாட்டின் படி தேர்வின் படி அவரை மூன்று முறை நாடாளுமன்றத்திற்கும் ஒருமுறை  1989இல் திமுக சட்டசபைக்கும் பரிந்துரைத்து ஜெயித்தார்.

பிறகு என்ன தான் அவருக்கு குறை ஏன் இறந்துவிட்டார். உங்களுக்கு ஏன் துக்கம்.

அப்படி அவர் உங்களுக்கு கொடுத்த விசுவாசத்திற்கு நீங்கள் கொடுத்த கொடுப்பினைகளுக்கு நாங்கள் சங்கடப்பட ஏதுமில்லை.

1996 சட்டமன்றத் தேர்தலில் மதிமுக சார்பில் நூற்றி என்பது பேர் போட்டியிட்டு நான்கு பேர் தான் அதில் வெற்றி பெற முடிந்தது.
கோவில்பட்டி தொகுதியில் அதிக வாக்கு பெற்று கூட நான் அதில் தோல்வி அடைந்தேன் என் போன்றோர் தவிர.
பல இடங்களில் மதிமுக டெபாசிட்டைக் கூட காப்பாற்ற முடியவில்லை. பம்பர சின்னம் பெற பாடுகள்.

எத்தனை பாடுகள் எத்தனை சிரமங்கள் எத்தனை விதமான பிரச்சாரங்கள்  அலப்பறைகள் மதிமுக நிலைத்து ஒரு நதியைப் போல ஓடிக் கொண்டிருக்கும் என்று நம்பி அதில் உழைத்த திமுகவை விட்டு வெளியே வந்த எங்களை போல எத்தனை பேருடைய கனவு  தமிழ்நாட்டின் அரசியல் வாழ்க்கையில் வீணாகப் போய்விட்டது .

வைகோ குலுங்கி குலுங்கி அழுகிறார். யாருக்காக அழுகிறார்? அவருடைய வாரிசுகளுக்காக அவர் அரசியல் பங்கு பற்றலின் சுயநலத்திற்காக மதிமுகவின் உன்னதமான மிகச்சிறந்த தனித்துவமான மாற்று அரசியல் நிலைப்பாட்டை தமிழகத்தில் கொண்டுவர வேண்டிய வந்திருக்க வேண்டிய வலிமைகளை இழந்து போய்  ஏன் அழுகிறார்.

நடந்தது என்ன அரசியல்வாதிகளின் பல பேருடைய மரணம் கிரிமினல் மரணமாக தமிழக வரலாற்றில் முடிந்து இருக்கிறது. ஆனால்  

மதிமுகவை நம்பி வாழ்ந்தவர்கள்  எங்களை போன்ற பலரின் இருப்பு என்பது ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தவிர  இன்றளவில் துக்கரமான சிவில் மரணங்களாக மாறிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் உண்மையில் எதற்காக அழுகிறீர்கள் வைகோ.

வாரிசு அரசியல் கூடாது என்பதற்காக கம்பு சுழற்றினீர்கள் இன்று திமுகவில் உங்கள் அரசியல் வாரிசு ஆன துரை வைகோவை பாராளுமன்றத்தில் நிப்பாட்டுவதற்கு கடின முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்.
  கணேச மூர்த்திகள் முடிந்து விட்டார்கள். வாரிசு எதிரி என சொன்னது நீங்கள்…. ஆனால்,இப்பொழுது உங்கள் மகன்  தந்தைக்காகத்தான் அரசியலுக்குள்  வந்தேன் என்கிறார் . நீங்கள் வேறு பாவம் ஏன்அழுது கொண்டிருக்கிறீர்கள்.

கண்ணீரைத் துடையுங்கள். எங்களுக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது.

#வைகோ
#வாரிசுஅரசியல்
#கணேசமூர்த்தி
#மதிமுக


1 comment:

  1. நிஜம் சுடுகிறது! அழுகிறார்

    ReplyDelete

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...