#மதுரையை தலைமை இடமாக தனி மாநிலம் தென்தமிழகம் வேண்டும்.
———————————
தென் மாவட்ட மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து அதிகாரத்தில் இருந்து வரும் அரசுகள் புறக்கணித்து வரும் சூழ்நிலையில் தென் மாவட்டங்கள் பின் தங்கி உள்ளது.
அதேபோல் மேற்கு மாவட்டங்கள் தொடர்ந்து அதிக வருவாய் ஈட்டி கொடுத்தாலும் மேற்கு மாவட்டங்கள் தமிழக அரசால் புறக்கணித்து வரும் நிலையில்…
வடக்கு(சென்னை) வாழ்கிறது..மத்திய (கொங்கு)தென் (மதுரை,விருதுநகர்,தூத்துக்குடி.குமரி)மாவட்டங்கள் தேய்கிறது.வேண்டும் கொங்கு பாண்டிய மாநிலம்
மதுரையை தலைமை இடமாக கொண்டு வடக்கே காவேரி தென் கரை -திருவரங்கத்தில் அரங்கன் சயனித்தல்
தெற்கே தென் குமரி வள்ளுவர் சிலை வரை தனி மாநிலம் உருவாக்க மத்திய அரசு முன்வரவேண்டும்.
ஏற்கனவே, மத்திய அரசு கடந்த 1998 முதல் சிறு மாநிலங்கள் மூலம் தான் நிறைய வளர்ச்சி பணிகள் செய்யமுடியும். நிர்வாக வசதியும், தேச ஒற்றுமைக்கும் அது வலுசேர்க்கும் என்கிற கொள்கை நிலைப்பாடு கொண்டுள்ளது என்பதால் மதுரையை தலைநகராக கொண்டு மாநிலம் அமைவது தென் மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கு வழிகோலும் என்பதில் மாற்றமில்லை.
#மதுரையைதலைமைஇடமாகதென்தமிழகம்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
16-4-2024
No comments:
Post a Comment