Monday, March 18, 2024

வாழ்க்கையில் எல்லாமே நீங்கள் எதிர்பார்ப்பது போல் இருக்க வேண்டுமென எண்ணாதீர்கள் வாழ்க்கையின் சுவாரஸ்யமே அதன் அடுத்த நொடி மர்மம் தான்....⁉️

பசிக்காத நேரம் இல்லை. பிரச்சனை இல்லாத நாளும் இல்லை. நிதான மனது, அதை முழுமையாய் அவதானிக்கிறதில், வாழ்வின் அர்த்தம் ஊடாடுகிறது. 

வாழ்க்கையில் எல்லாமே நீங்கள் எதிர்பார்ப்பது போல் இருக்க வேண்டுமென எண்ணாதீர்கள் வாழ்க்கையின் சுவாரஸ்யமே அதன் அடுத்த நொடி மர்மம் தான்....⁉️

வெறுமையான காலங்களைப்போல மனிதனை வெறுக்கச்செய்வது வேறொன்றுமில்லை. சோகங்களின் படைசூழ பேய் துரத்தும் நாட்களில் கூட செலுத்தப்பட்டவனை போல ஓடி ஓடி அலைந்து நின்றுகொண்டே சோறு தின்று அப்போது கூட இப்படி ஒரு வெறுமை ஏற்பட்டதில்லை. 

வயது 30க்கும் மேல் இடைப்பட்ட காலங்கள்தான் எத்தனை மேடுபள்ளங்கள். நம்மை நாமென கருதமுடியா வளைகோடுகள். நாம்இவ்வளவுதான்  எனப் புரட்டிப்போட்டுவிட்ட சுயதரிசனங்கள். எதன்பின்னோ இத்தனை வருடங்கள் ஓடிவிட்டு இனி ஓடுவதற்கு ஒன்றுமில்லை வேண்டுமானால் படுத்து உறங்கு எனக்கூறும் காலத்தின் எள்ளலை எதிர்க்க வீர்யத்துடன் திரட்டும் மனத்திண்மைகள். 

ஓடியே கடந்த நதி தேங்கி நின்றால் குப்பைகள் சேர்ந்து போகாதோ? இளவயது அறியாமையேனும் கையில் இருந்திருக்கப்படாதோ?

சுயம் தேடும் முயற்சியில் இழந்து போன அறியாமை சிலசமயம் நானாவது உன்னுடன் இருந்திருப்பேனல்லவா என சிரிக்கிறது...  எவ்வளவு பணிகள் செயது கடந்துள்ளோம்.இன்றைக்கு இதை நினைத்துக்கொண்டால் வியப்பாக இருக்கிறது. எந்த நம்பிக்கையின் பால் இதெல்லாம் என்னை வழிநடத்தியது என திகைப்பாகவும்.. இதெல்லாம் என்னைப்பொறுத்தவரை அர்த்தமிழந்து போயின. 

இதை ஒரு அன்றாட அழுத்தங்களிலிருந்து தப்பிப்பதற்கான மனநிலையாகவே பலரிடம் பார்க்கிறேன். நானும் அதுபோலவே பலமுறை செய்ததுண்டு. என்ன.. அது என்பதை உணரமுடியாது.. அவ்வளவுதான்.. 

நிறைய நட்புகளும் திரும்ப திரும்ப  ஏன் வாய்புக்கள் வரவில்லை? அதை பெற்று விடுங்கள் என நம் மீது உள்ள அன்பில் வலியுறுத்திக்கொண்
டிருந்தார்கள்.இது கடை சரக்கு அல்ல… வாங்க.

 தன் சுய அறிதலும் சமுதாயத்தில் நமக்கான நிலையும் வாழ்க்கைப்பாதை இதுதான் எனத்தெரிந்த ஆயாசமும் வெறுமையை உண்டாக்கி விடுகின்றன.

ஓடியதன் அலுப்புதான் இந்த புலம்பலா? 
ஆனால் இலக்கினை உண்டாக்கியிருக்கும் தேங்கியிராமல் பாயும் இடம் எதுவென தேர்ந்தெடுத்தும் இருக்கும் மனிதர்கள் இந்த வெறுமையில் மாட்டிக்கொள்வதில்லை போல. அல்லது காலை முதல் மாலைவரை ஒரு கட்டாயத்தின் பேரில் ஓடிக்கொண்டிருக்கும் பலருக்கு இது தோன்றுவதில்லையா? 

கட்டாயங்களும் சிலசமயம் தேவைதான். Commitment களும் தான் என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். முடிந்த மட்டும் விரைவில் அதை புதுப்பிப்பது நல்லது. இல்லையெனில் நாம் இகழ்ந்த நம்மூத்ததலைமுறையினரை
விடஅதிகம்பாதிக்கப்பட்டுவிடுவோமென்ற பயம் எனக்கு வந்துவிட்டது... 52 ஆண்டு கால அரசியல் களம் -தளம் என காலசக்கரம் ஓட விட்டது.

செய்வதற்கு ஏதுமற்ற ஓர்பொழுதினில்...

என்றென்றும் நிலைத்திருக்கும் ஒன்றை, நம்மை திருப்திப்படுத்தும் ஒன்றை நாம் விரும்புகிறோம்.

நிலையான மகிழ்ச்சியை, நிலையான திருப்தியை, நிலையான உறுதியை நாம் தேடுகிறோமல்லவா?

நாம் நிரந்தரம் என்று எதை அழைக்கிறோம்?

நாம் உண்மையில் எதைத் தேடுகிறோம்?

எது நமக்கு நிரந்தரத்தைத் தரும்?





#வாழ்வியல் #life 
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
18-3-2023

No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".