Wednesday, March 6, 2024

#*முதல்வர்ஸ்டாலின் அவர்களே நீங்கள் நலமா*..? ஆமாம், முதல்வரே நாங்க ரெம்ப ரெம்ப நலமா இருக்குறோம் உங்க திராவிட மாடல் ஆட்சியால..நாங்க ‘திக்கு தெரியா’ நலம் தான் முதல்வரே..!

#*முதல்வர்ஸ்டாலின்
அவர்களே 
நீங்கள் நலமா*..?

ஆமாம், முதல்வரே நாங்க ரெம்ப ரெம்ப நலமா இருக்குறோம் உங்க திராவிட மாடல் ஆட்சியால..நாங்க ‘திக்கு தெரியா’ நலம் தான் முதல்வரே..!



 
மதுவிலக்கு முதல் கையெழுத்து ⁉️ சமீபத்தில் மதுரை, கீழக்கரை, பள்ளிக்கூடத்தில் இனிப்பு போதை வஸ்துக்கள் ,ஜாபர் சாதிக் வரை போதைப்பொருள் வியாபாரம் நடக்குது- மது கிடைக்கிறது . பிறகு என்ன? சுகம்தான்.

உங்கள் மரபு  ரீதியான ஆதரவு அரசு ஊழியர்களின் தவிப்புகள்.

5 முறை ஏத்தின பால் விலையால் நலம்..
4 முறை ஏத்துன  மின்கட்டத்தால் நலம்..
3 முறை உயர்த்துன தண்ணி கட்டனக்த்ல் நலம்..
2 முறை உயர்த்துன பஸ்கட்டணத்தால நலம்...
சென்னை வடிகால் பணியில 4000 கோடி க்கு நீங்க பண்ணின ஊழலால் நாங்கள் நலம்..
அடையாறு கூவத்துல வருசா வருசம் 1500 கோடினு 3 வருசமா  4500 கோடி பணத்தை போடுறீங்களே அதனால நாங்க நலம்..
கலைஞருக்கு சமாதிக்கு 136 கோடி செலவு செஞ்சீங்களே அதனால நாங்க நலம்..
2000 கோடி போதை மருந்தை கட்சிகாரன் மூலமா வித்துட்டு வர்றீங்களே அதனால நாங்க நலம்..
வருசத்து 60 ஆயிரம் கோடிக்கு நீங்க கல்லா கட்டுற  டாஸ்மாக்கால நாங்க நலம்..
டாக்டரே இல்லாம கிடக்குற ஆஸ்பத்கிரியால நாங்க வலம்..
விவசாய கடன் தள்ளுபடி கல்வி கடன் தள்ளுபடி நகை கடன் தள்ளுபடி..
எல்லாருக்கும் மாசம் 1000 ரூவானு மாதாமாதம் முன் கட்டன வசூல், வருசம் 5 லட்சம் பேருக்கு அரசு வேலை கரும்புக்கு 5000 ரூவா, நெல்லுக்கு 4000 ரூவானு
 நீங்க வாயால சுட்ட வடையை சாப்பிட்டதால நாங்கலெல்லாம் மிக்க நலம் ஏறுன பத்திர பதிவு கட்டனத்தால நலம்..
பள்ளி மாணவர்கள் போதை ஊசி கட்சா பீர்பாட்டில் மகிழ்ச்சியா வாழுறதால நாங்க நலம்..
எங்க பாத்தாலும் ரவுடி தொல்லை கஞ்சா அடிச்சி வந்து மாமுல் வசூல், வழி பறி பலாத்காரம் நில ஆக்கிரம்ப்பு சிறப்பான சட்டம் ஒழுங்கால போலிசு கூட ஸ்டேசன்ல பாதுக்காப்பு இல்லாம வேலை பாக்க முடியாம வீட்டுல இருக்கிறதால நாங்க நலம்..!
கிளாம் பாக்கம் பஸ் ஸ்டாண்ட்  மாத்தி எங்களே குளிர வச்சதால நாங்க நலம்..
குடிக்கிற தண்ணி வ்ங்கின சொத்துக்கெல்லா வரிவிலை கூட்டுனதால நாங்களெல்லாம்  நலம் ..! எங்க ஒவ்வொருத்தர் தலையில 5 லட்சம் கோடி கடனை வாங்கி தமிழ்நாட்டு கடனை வரலாற்றிலே இல்லாத அளவுக்கு 3 வருசத்துல 3லட்சம் கோடிலேர்ந்து லட்சம் கோடியா மாத்திருக்கீங்களே 

உங்கள் வம்ச  மகன்  பேரன்  மகள் 50 ஆண்டு வாரிசு அரசியல் …
சிலைகள், நினைவு இடங்கள்,
ஊழல் என்ற கப்பம், நீங்க உங்க தங்கச்சி போரடிய சாத்தானகுளம் போல பல காவல் மரணங்கள, கொலைகள் என பல……

சட்டம்-ஒழுங்கை பிணவறையில்……

சென்னை, பெரம்பூரில் காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவரை, ஒருசில மாணவர்கள் சுற்றிவளைத்து தாக்கியது;
•புழல் சிறையில் துணை ஜெயிலர் ஒருவரை வெளிநாட்டுக் கைதி தாக்கிய கேவலம்;
•பட்டுக்கோட்டையில் பட்டப் பகலில் வியாபாரி, கத்தி போன்ற ஆயுதங்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகிறார்;
•சென்னை, கே.கே. நகரில் நடந்த ஒரு கோயில் திருவிழாவில் பிரபல ரவுடி ஒருவர், தன் கூட்டாளிகளுடன் பட்டாக் கத்திகளை கையில் ஏந்தி தெருக்களில் நடனமாடிச் சென்று மக்களை மிரட்டும் கொடூரம்; இப்படி பல உண்டு….
•28.8.2023 அன்று வெளிவந்துள்ள நாளிதழில், திருவொற்றியூரில் 140 கிலோ போதைப் பொருள் பறிமுதல், அரும்பாக்கத்தில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்; 29.8.2023 அன்று வெளிவந்துள்ள நாளிதழில், 10 நாட்களில் 50 கிலோ கஞ்சா மற்றும் 34 பேர் கைது போன்ற செய்திகள் வந்துள்ளன.
•`ஆப்பரேஷன் கஞ்சா 1, 2, 3’ போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்கிறது என்று கூறும் திமுக அரசின் ஆட்சிக்குப் பிறகும், இதுபோன்ற போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் கைது, போதைப் பொருட்கள் பறிமுதல் என்ற செய்திகள் மட்டும் வருகின்றன.
•இச்செய்திகள் மூலம், இந்த திமுக அரசு, கடத்தலில் ஈடுபட்டுள்ள ஆணி வேரை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருவதையும், போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதிலும் தோல்வி அடைந்ததையே காட்டுகிறது.
இந்த திமுக அரசு பொறுப்பேற்றது முதல், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்களின் நடமாட்டம் மற்றும் போதைப் பொருள் கேந்திரமாக தமிழகம் மாறியுள்ளது.

அதனால நாங்க நலம்..! மிக சந்தோஷமாக உள்ளோம் உங்க கொற்ற குடும்ப முடியாச்சியில்

இன்னும் சொல்லாம விட்ட "வெகு சிறப்பான ".... உங்க ஆட்சியாள நாங்கலெல்லாம் மிக மிக நலம் முதல்வரே..!

வாழ்க உங்க குடும்ப விடியல் ஆட்சி!
வாழ்க  நீங்க மட்டும் வளம் பெறும் திராவிட மாடல்!!
வாழ்க உங்க அடிமை கூட்டம்!!!
வாழியவே உங்க வாரிசுகள் பரிபாரம்-அரியாசனம்.
இங்கு  ‘அறியாசனம்’ இருக்கு வரை உங்க அரியாசனம் இருக்கும் . கவலை வேண்டாம்.

பழைய கமு (கலைஞர் முன்) திமுககாரன், உங்களோடு வெளிநாட்டு பயணம் என பழகியவன் என்ற நிலையில் உங்க உடல் நிலை நல்ல இருக்கட்டும் என இயற்கையை
இறைஞ்சுகிறேன்..

#DMKFails #திமுக

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...