பொய்களை, புனைவுகளைக்
கட்டமைப்பது எளிது.
உண்மைகளை நிஜங்களை நெருங்குவது
நெருப்பில் நடப்பது போல!
புனைவுகள் சுகமானவை.
அதைப் போர்த்திக் கொள்வதும்
கிழித்து எறிவதும்
எரிப்பதுமாக.
எப்படியும்
புனைவுகள் புதிதாகப் பிறந்துக் கொண்டே இருக்கின்றன.
நிஜங்களை விழுங்கி
ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது.
இனி நிஜங்களை தொடாதீர்கள்.
விட்டுவிடுங்கள் என சொல்லி விட்டு போலியாக வாழ்வோம்.
அதையும் பின்நவீனத்துவம், இருத்தல் நிமித்தம் என்போம்.
No comments:
Post a Comment