Saturday, March 16, 2024

*தேர்தல் அறிவிப்பு வந்து விட்டது*. *இனி பொன்முடி அமைச்சர் பதவி ஏற்பு*….⁉️ *சில விடயங்கள்*…

*தேர்தல் அறிவிப்பு வந்து விட்டது*.
*இனி பொன்முடி அமைச்சர் பதவி ஏற்பு*….⁉️ *சில விடயங்கள்*…
••••
பொன்முடி வழக்கு விவகாரத்தில் திமுக மீண்டும் மீண்டும் இடியாப்பச் சிக்களுக்குள்ளே சென்று கொண்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றம் அவரை குற்றவாளி இல்லை என்று சொல்லி  விடுதலை எதையும் தீர்ப்பாக அறிவிக்கவில்லை. ஏற்கனவே அளித்த தீர்ப்பில்  மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கியிருக்கிறது.  மேல் முறையீடுகள் வழியாக அவர் இப்போதைக்கு சிறைக்குச் செல்வதை மட்டுமே உச்சநீதிமன்றம் தடுத்து வைத்திருக்கிறது.  Pending appeal and suspension of sentence till final disposal of the said appeal… that is the status in the Supreme court.
It is normal practice. 

ஆக வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது! அதை மீறி அவர் எம்எல்ஏ ஆவார் அமைச்சராவார் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு திரிந்தால் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு  இறுதி தீர்ப்பு   எதிராக வரும் போது உள்ளவார்கள் என்பது கூட அந்த திமுக அதி புத்திசாலி வழக்கறிஞர்களுக்குத் தெரியாதா. கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறேன் என்ற பெயரில் கண்டபடி ஆலோசனைகள் வேண்டாம்.

இப்படியானவர்களுக்குத்தான் திமுகவால் லாபம் கிடைக்கிறது.
அவர்களால் திமுக விற்கு ஒருபலனும் இல்லை.  அதை திமுக தலைமை உணர்கிறதோ என்னவோ தெரியவில்லை .  காலுக்கும் கீழ் குழையடித்து தெண்டனிட்டு நிற்கிறவர்கள் எல்லாம் எம்பி எம்எல்ஏ என்று பதவிகளை  வாங்கிக்கொண்டு இஷ்டத்துக்கு சொத்து சேர்த்துக் கொண்டு கூத்தடிக்கிறார்கள். போதும் போதாதுக்கு இப்படிக்குழப்பத்தை உண்டாக்கி மேலும் பிரச்சினைகளையும் உண்டாக்குகிறார்கள்.

மனக்கசப்பில் தான் சொல்கிறேன் நான் திமுகவிலிருந்த போது அவர்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உண்டான வழக்குகள் பலவற்றை சரி செய்து தீர்த்து கொடுத்து இருக்கிறேன். 
உதாரணங்களைச் சொல்வதென்றால் பலவற்றையும் நான் இங்கு சொல்ல முடியும்.

 ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் 2014 கலைஞர் கைது விவகாரத்தில்
கவர்னர் மாளிகையிலும் சரி! நீதிமன்றங்களிலும் சரி! நான் அங்கு இங்குமாக அலைந்து  இந்தக்கைது  எவ்வளவு தவறானது என்று வாதாடி
நியாயம் பெற்று தந்தேன். ஜெயலலிதாவின் நடவடிக்கை மீது பல வகையான குறுக்கு விசாரணைகளை உண்டாக்கி  வழக்கை நீர்த்துப் போக செய்தேன்

கனிமொழி அதிபன் போஸ் விவாகரத்து வழக்கில் ஈடுபட்டு சட்டப்படி சட்டபூர்வமாக அதையும் தீர்த்துக் கொடுத்தேன்.

ஜெயலலிதாவின் ஊழல் வழக்கு தமிழ்நாட்டில் நடந்தால் சரியாக வராது என்பதனால் அதை கர்நாடக நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்பதை மனுவாகக் கொடுத்து அதை அங்கே மாற்றி  விசாரணைக்கு உட்படுத்தியதில் முதன்மையான பங்கு என்னுடையதுதான்.

முதல்வர் ஸ்டாலின் வீட்டில் நள்ளிரவு நடந்த கைது விவகாரத்தில் தலையிட்டு இனிமேல் இது மாதிரியான வழக்குகளை  எப்போதும் அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் கொண்டுவரக் கூடாது என்று நீதிமன்றத்தில் தடையும் வாங்கினேன்.
தக்கார் யார் தகவிலார் யார் என்று அறியாமல் அல்லது கடைசி வரை பாடுபட்ட என்னைப் போன்றவர்களை ஒரு காரணமும் இல்லாமல் வெளியே வைத்துவிட்டு அதாவது அறிவாளிகள் யாரும் எங்களுக்குத் தேவை இல்லை முட்டுக் கொடுக்கும் முட்டாள்களும் துட்டு சம்பாதிக்க தெரிந்தவர்களுமே எங்களுக்குப்போதும் எனச் செயல்படும்  இன்றைய திமுக தலைமைக்கு எதைச் சொல்லி புரிய வைப்பது அல்லது ஒருவர் என்ன நன்மையைத்தான் செய்ய முடியும். . பொன்முடி விவகாரத்தில் மேலும் ஆழ்ந்த சிக்கலைத் தான் இவர்கள் உருவாக்குவார்கள்.

இப்படியான ஜால்ராக்களை
 
என்னைப் போன்றவர்கள் எல்லாம்  மதிக்கத் தேவையில்லை போங்கடா  போக்கற்ற பயல்களா என்று சொல்லிவிட்டு நமது வேலையை பார்க்க வேண்டியது தான்.
ஒன்றும் நான் குறைந்தும் போய்விடவில்லையே❓

#DMKFails

#ksrpost
16-3-2024.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...