#*எனது மனநிலை*
நாம் அனைவரும் சோர்வடைந்துவிட்டோம். உண்மையிலேயே அலுப்பாக இருக்கிறது. வாழ்க்கை மிகவும் கடினமான பாதைதான், ஆனால் அழகானதும்கூட. நம்மிடமும் பிறரிடமும் நாம் அதிகம் எதிர்பார்ப்பதால் இந்தச் சோர்வுக்கு ஆளாகியிருக்கலாம். ஒருவேளை, மனித குலத்தால் மண்புழுவைப் போல மிக நிதானமாகவே முன்னேற முடியுமோ என்னவோ! முதலில், நாம் இந்த அளவுக்கு வளர்ந்திருப்பதை அடிக்கடி நினைவுகூர்ந்து கொண்டாட வேண்டும். நிறைய ஓய்வெடுக்க வேண்டும். எளிய இன்பங்களில் மனநிறைவுடன் திளைக்க வேண்டும். எங்கும் அன்பையே காண வேண்டும். நான் வசிக்கும் பகுதி அருகில் ஒரு நதி ஓடுகிறது. அமைதியுடனும் நிதானத்துடனும் வளைந்து செல்கிறது. தான் ஏன் கடலாகவில்லை என்றோ ஆர்ப்பரிக்கும் வெள்ளமாகவில்லை என்றோ தன்னை அது கேட்டுக்கொள்வதில்லை. தான் எதுவோ அதில் மட்டும் ஆழ்ந்து லயித்திருக்கிறது. அடிபணிந்திருக்கிறது. நாமும் அந்த ஆற்றைப் போல நாம் யாரோ அதற்குச் சரணடைவோம். தூய நல்நிலையில் நிறைவடைவோம். நான் அந்த ஆற்றின் அருகே நாளை துயில்கொள்வேன். ஓய்வெடுப்பேன். மகிழ்ச்சியுடன் என்னை அர்ப்பணிப்பேன்.
- ஜெஃப் பிரவுன்.
“Yesterday I was clever, so I wanted to change the world. Today I am wise, so I am changing myself.”
No comments:
Post a Comment