தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம் அது தெரியாமல் போனாலே வேதாந்தம்.
*
துன்பம் உருக்கணைய உறுத்தியளிக்கிறது!
அன்பு வாழ வைக்கிறது!
அஞ்சாதவர்கே உலகம் சொந்தம்
••••
முன்போல் எல்லாம்
இல்லை
இப்போது எவ்வளவோ
மாறிவிட்டது
காலத்திற்கேற்ப
வாழ்வியலும்தான்
இருந்தாலும்
என்ன
இப்போதும்
கூட
உவப்பில்லா உறவுகளை சட்டென உதறித்தள்ள முடிவதில்லை
விருப்பமற்ற இடத்திலிருந்து
அக்கணமே வெளியேற இயலவில்லை
வேண்டாத கனவிலிருந்து பாதித்தூக்கத்தில்
விழித்துக்கொள்ள இயன்றதில்லை
புறக்கணிக்கும் மனிதர்களை
மனதார மறுதலித்து
நகர்ந்துவர மனம் வருவதில்லை
இன்னும்
இன்னும்
இல்லை என்று உறுதியாய் உரைக்கத் தெரியவில்லை
வேண்டாம் என்று பிடிவாதமாய் மறுக்கத்தெரியவில்லை
பொருத்தமற்ற பயணத்தை
இடைநடுவே நிறுத்தத்தெரியவில்லை
இருப்பை உணராத இடத்தில்
இல்லாமலேயே போகத்தெரியவில்லை
எப்போதும்
அப்படித்தான்
ஒரு கசப்பான முடிவுக்குப்
பயந்து
முடிவே இல்லாத
கசப்புகளோடு
வாழப்பழகிக்கொள்கிறோம்
இல்லையா
உண்மையில்
சூழ்நிலைகளால்
சுயம் இழக்காத
ஒரு வாழ்வுக்காகத்தானே
நம் அத்தனை போராட்டங்களும்
இருந்தும்
என்ன
வாழ்வின்
இருண்மைகளோடுதான்
தினம் நூறுமுறை
சமரசமாகிப்போக வேண்டியிருக்கிறது
உயிர்த்திருத்தலின்
பொருட்டு
Riska Mukthar ரிஸ்கா முக்தார்
உங்கள் புத்தகங்கள், உங்கள் பற்றுதல்கள், உங்கள் மனைவி அல்லது கணவர் மீதுள்ள சார்புகள் - அது எதுவாக இருந்தாலும், அதைப் பாருங்கள். அதை நீங்கள் கூர்ந்து கவனித்தால், அந்த பற்றுதலின் வேராக பயம் இருப்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.
நாம் வார்த்தைகளுடன், கோட்பாடுகளுடன் விளையாடலாம். ஆனால் உண்மை என்று வரும்போது, நாம் பின்வாங்குகிறோம். நீங்கள் பின்வாங்கி, உண்மையை எதிர்கொள்ளாமல் இருக்கும்போது, மாயையைப் புரிந்துகொள்வதில் உங்களுக்கு அக்கறை இல்லை.
நீங்கள் மாயையைத் தாண்டிச் செல்வதை விட அதில் வாழ்வதையே விரும்புகிறீர்கள்.
பாசாங்குக்காரராக இருக்காதீர்கள்.
நீங்கள் ஒரு மாயையில், சுயமயக்கத்தில் வாழ விரும்புகிறீர்கள்.
அதுதான் உண்மை.
அதை எதிர்கொள்ளுங்கள்.
நீங்கள் அப்படி கவனிக்கும்போது, மேலோட்டமான, சாதாரணமான அச்சங்களை அறிந்துகொள்வது மட்டுமில்லாமல், உங்கள் மனதின் ஆழமான பகுதிகளிலும் ஊடுருவுகிறீர்கள்.
பின்னர் பயம் முற்றிலுமாக முடிவுக்கு வருகிறது; மாயைக்கான காரணி முடிவுக்கு வருகிறது. நான் கடந்து வந்த பாதையை
கொஞ்சம் திரும்பி பார்த்தேன்....
சிக்கல்களை பற்றி யோசித்தால் வலிகள் மட்டுமே தோன்றும். தீர்வுகளை ஆராய்ந்து பார்த்தால் நிச்சயம் வழிகள் பிறக்கும். மாற்றி யோசித்தால் மாற்றம் உண்டு.
வித்தியாசமாக இருக்க ஒருபோதும் வெட்கப்படாதீர்கள். மாறுபட்ட எண்ணங்கள் தான் வாழ்க்கையின் முதல் மாற்றத்தின் ஆரம்பம்.
வாழ்க்கையில் நடந்ததை நினைத்து வருந்த வேண்டாம்..அதை மாற்றவோ, மாற்றவோ, மறக்கவோ முடியாது. எனவே அதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு முன்னேறுங்கள்.!
வாழ்க்கையில் நம்மை எப்போதும் குற்றம் சாட்டுபவர்களுக்கு உண்மைகளை விளக்க வேண்டிய அவசியமில்லை... ஏனென்றால் அந்த உண்மைகளுக்கு முன்பே அவர்கள் தவறு கண்டுபிடிப்பார்கள்.
சவால்களும்...
ஏமாற்றங்களும்..
துயரங்களும்...
துரோகங்களும்...
தூவப்பட்டு கிடந்தன...!!
இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தேன்
இத்தனையும் கடந்து வந்த பெருமையுடன்..
என்னை நேசித்துக் கொண்டு...!!
•••
#வாழ்வியல்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
4-9-2024.
No comments:
Post a Comment