Thursday, September 19, 2024

இடைவெளியினால் ஏற்படும் மாற்றங்கள் பற்பல உண்டு. உணவு உடை

 இடைவெளியினால் ஏற்படும் மாற்றங்கள் பற்பல உண்டு. உணவு உடை உறைவிடம் போக்குவரத்து போன்றவற்றில் ஏற்பட்ட வியக்கத்தக்க மாற்றங்களை நாம் கண்கூடாகக் காண்கிறோம். நேற்றைக்கு தான் கேள்விப்பட்டேன் நெல்லை மாவட்ட லாலா கடை பக்குவத்தில் தின்பண்டங்கள் கிழக்கு முகப்பேரில் கிடைக்கிறது என்றனர்.

பக்கத்து கடைகளில் வாங்கினால் கிழங்கு மாவிலும் பாமாயில் எண்ணெயிலும் செய்த மாவு பண்டங்களை காட்டி இதுதான் மிக்ஸர் சேவு என்கிறார்கள் நெல்லையில் லாலாவிலும் எந்த கடை அல்வாவுக்கு எந்த கடை உருட்டு சேவு எந்த கடை அம்பை முருக்குக்கு‌ எந்த கடை பெரிய சைஸ் மிச்சருக்கு‌‌ என்று பார்த்து பார்த்து வாங்கிய நமக்கு கிழங்கு மாவை காட்டி இதுதான் சார் மிக்சர் காரச்சேவு என்றால் என்ன சொல்வது நாயை பிடித்து நரி என்றால் நம்புவதற்கு ஆள் வேண்டாமா என்று மகாதேவிலே கண்ணதாசன் வசனம் எழுதியது போல கேட்க வேண்டும் போலிருக்கிறது ஆகவே அதற்கு மாற்றாக நம் திருநெல்வேலி பண்டம் என்றால் பார்ப்போமே என்று ஆள் அனுப்பி கிழக்கு முகப்பேர் சென்று வாங்கி வர செய்தேன். ஸ்பார்ட்டன் பள்ளிக்கூடத்து பக்கத்தில் அந்த கடையாம். பத்துக்கு பத்து இடத்தில் பண்டங்களை விற்பனை உண்மையான கோவில்பட்டி கடலை மிட்டாய் உண்மையான கடலை மாவிலும் உண்மையான கடலை எண்ணெயிலும் செய்த நம்ம ஊர் பண்டங்கள் விற்பனையில்….

வஞ்சியான் பிறரை வஞ்சியான் என்பார் சுந்தரம் பிள்ளை அதுபோல நெல்லையான் யார் சொல்லையும் நம்புவான் பரவாயில்லை ‌என்று சொல்லி பண்டங்களை வாங்கி வந்தார் ‌ நெல்லை பண்டங்களை….. இந்த காலத்தில் பர்கர் பாணி பூரி பேல் பூரி தஹிபூரி மோகத்தில் பலர் உள்ளனர். அந்த இனிப்புச் சேவு வேற எங்கும் கிடைக்காது. அது கூட நெல்லை லட்சுமி லாலா கடையில் கிடைக்கும் உருட்டு சேவு நெல்லையிலேயே வேறு எங்கும் கிடைப்பதில்லை அதுபோல் பஸ் ஸ்டாண்ட் நுழைவாசலில் வலப்பக்கத்தில் விற்பனை செய்த ஒரு பழைய மிட்டாய் கடையில தான் அந்த பெரிய சைஸ் மிச்சர் கிடைக்கும். கழுகுமலை பட்டரை சேவு, சாத்தூர் சேவு, அருப்புக்கோட்டை ஒமா பொடி,சங்கோரன்கோவில் மைசூர்பா-பக்கோடா, தூத்துக்குடி மக்ரோன் என பல வகைகள் அடியேனுக்கு பேமஸ். இவற்றை எல்லாம் அங்கே வந்து தான் தேட வேண்டும்.. இப்போதைக்கு கோவில்பட்டி பண்டங்களை கொஞ்சம் பதம் பார்ப்போம்…… அவரது உறவினர் பாளையங்கோட்டையில் நண்பர் ரத்னா சித்தனா ஹோட்டல் ராஜன் அவர்கள் என்று தெரிந்து கொண்டேன். ரத்னா ஹோட்டல் பரோட்டா வறுவல்,சித்னா ஹோட்டல் சைவ சாப்பாட்டிற்கும் சிறந்தது. டவுனில் இருட்டுலாலா கடை பிராஞ்ச் விசாகம் சுவிட்சில் பெரிய மிக்சர் கிடைக்கும்..

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...