Wednesday, September 4, 2024

இன்றைய வாழ்க்கையானது சரி, தவறு, நெறிமுறைகள், கொள்கைகள்,

 இன்றைய வாழ்க்கையானது  சரி, தவறு, நெறிமுறைகள், கொள்கைகள், உயரிய கருத்துக்கள் போன்றவற்றால் நிர்வகிக்கப்படுவதில்லை.மாறாக அதிகாரம், பலம், பலவீனம், புத்திசாலித்தனம், முட்டாள்தனம், தகவமைப்பு, அழிவு போன்றவற்றாலேயே நிர்வகிக்கப்படுகிறது. உங்கள் உரிமைகளைப் பெற, நீங்கள் வலிமை, புத்திசாலித்தனம் மற்றும் யதார்த்தத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள வேண்டும். 

நாம் பல மில்லியன் கணக்கான ஆண்டுகளாக ஒருவரையொருவர் உடல் ரீதியாக வேட்டையாடும் உயிரினங்களிலிருந்து, இன்று பொருள் ரீதியாக, மனரீதியாக, உளவியல் ரீதியாக மற்றும் சட்டப்பூர்வமாகவும் ஒருவரையொருவர் வேட்டையாடும் உயிரினங்களாக பரிணமித்துள்ளோம்.


சண்டாளன் என்பது அவதூறு என்பது பார்ப்பான் என்பது அவதுறு;சூத்திரன் என்பது அவதூறு; சாணார் என்பது அவதூறு;வேடன் என்பதும் அவதுறுதான்! ஆனால் இவை சாதிப் பெயர்கள்.வடுகன் என்பதும் இதில்தான் வரும்.வடுகன் தீவிர தமிழ் தேசியர்கள் பயன்படுத்துகின்றனர்

•••

இந்த சமூக வலைத்தள உலகம் இருப்பதை இல்லாததாகவும், இல்லாததை இருப்பதாகவும் எளிதாக  காட்டிவிடுகிறது, எந்த ஒன்றினதும் உண்மைத் தன்மைகளை ஆராயாமல் தட்டச்சு செய்தும், பிரதி செய்தும் பதிவுகளை இடுகின்ற அதிகப் பிரசங்கித்தனமும் முன் முடிவுகளும் தனிமனித துதிபாடல்களும் இன்றைய இளைய சந்ததிகளின் சாபம் என்பேன். 


எதுவாகினும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தியுங்கள், ஆராய்ந்து செயற்படுங்கள். அனுபவத்தில் மூத்தவர்களோடு உரையாடுங்கள், இல்லையா அமைதியாக பொறுத்திருங்கள். நீங்கள் பகிருகின்ற கருத்துக்கள் சமூக மட்டத்தில் ஏற்படுத்துகிற விளைவுகள் குறித்து விழிப்போடு இருங்கள்.Sharmila Vinothini Thirunavukarasu

•••

1. சான்ஸ் கிடைக்கும்போது சும்மா இருந்துட்டு இப்ப துள்ளிக் குதிச்சு கம்பிளெயிண்ட் கொடுக்கிறாங்க.

2. அதிர்ஷ்டக்கார ஹீரோக்கள்டா, அனுபவிச்சாங்க.

என்ற இரண்டு விதமான ஆண்திமிர் வெளிப்படுகிறது. 

நியாயமாக ஒரு நடிகனைப் போலவே சினிமாவில் நடிப்புத்தொழில் செய்யத்தான் அந்த நடிகைகளும் வந்தார்கள். அந்தப் பெண்களுக்கு மிகப் பெரிய துன்பம் கொடுக்கும் தொல்லை செய்த கிராதகர்களை விட்டு விட்டு அந்தப் பெண்களைப் பற்றிப் புறம் பேசுவதை எதில் சேர்ப்பது?


எத்தனை விசாகா கமிட்டி, ஹேமா கமிட்டிகள் வந்தாலும் இவர்கள் மனதில், இல்லை இல்லை இவர்கள் கால்களுக்கிடையில் இருக்கும் மனதின் அழுக்கை வெளுக்க முடியாது. இதுதான்

இன்றைய சூழல்

•••

ஒரு படத்தைப் பார்க்கப் போறவங்க எல்லா தரப்பு ரசிகர்களும்தான்.

அப்படிப் போய்ப் பார்க்கறவங்க நல்லாயிருக்குன்னு சொல்லி,

கோடி கோடியா இலாபம் வந்தா சந்தோஷமா ஏத்துக்கறது,

அதே அந்தப்படம் அவ்ளோ நல்லாயில்ல,குறையிருக்குன்னு சொன்னா உடனே சங்கீங்கறது,மங்கீங்கறது,

"நீ உசந்த ஜாதிக்காரன்,

அதான் இந்தப்படம் புடிக்கலைன்னு சொல்றேன்னு என

ஜாதிச்சாயம் பூசறது"ன்னா 

அது என்ன மாதிரியான மனநிலை ?


அப்படி ஒரு சாராருக்கு மட்டும்தான் படம் எடுத்திருக்காங்கன்னா,

டைட்டில்லயே போட்டுட வேண்டியதுதானே ?

இது அவங்களுக்கான படம்,

அவங்க மட்டும் பார்த்தா போதும்,

காசு கொடுத்தாலும்,மத்தவங்களுக்கு அனுமதி இல்லைன்னு முன்னறிவிப்பு செஞ்சிடலாமே,அதைவிட்டுட்டு,

எப்பப்பாரு ஜாதி ஜாதின்னு வம்பு வளர்க்கறதும் நல்லாவா இருக்கு ?


https://youtu.be/sFAs5LUS45k?si=JQBMH-Fa56oiT83I

@KanimozhiMathi


No comments:

Post a Comment

அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு..

 அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு.. அப்புறம் சிங்கப்பூர் முதலீடு ஈர்ப்பு.... பின் ஜப்பான், இப்போது அமெரிக்கா முதலீடு ஈர்ப்பு  கார் ரேஸ் என….. ஆன...