Sunday, December 6, 2015

TN flood unites the people

கைகோர்த்து நிற்கும் மக்கள் சக்தி - TN flood unites the people

--------------------------------------------------------------------

தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும், மாநிலத்தின் உயிர் நாடியான சென்னையிலும், கடலூரிலும் மக்கள் மழை வெள்ளத்தில் சிக்கி சிதைந்து வருகின்ற நிலையில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை சரிவர எடுக்காமல் கையறு நிலையில் உள்ளது ஆளும் அதிமுக அரசு. இந்த கொடுமையான சூழ்நிலையில் யாரையும் குற்றம் சாட்டுவதோ, குறை சொல்வதோ, விமர்சிப்பதோ கூடாது என்றாலும் மனதில் உரைக்கும் வகையிலான உண்மைகளை எடுத்துக் கூற வேண்டிய கடமை நமக்குள்ளது. இது ஒரு ஆரோக்கியமான விமர்சனமும் கூட.

பிரெஞ்சு சர்வாதிகார அரசியான மேரி ஆண்டைனெட்தான் பிரெஞ்சு புரட்சிக்கான காரண கர்த்தாவாக விளங்கினார். மக்கள் பசியாலும், பஞ்சத்தாலும், பட்டினியாலும் வதைப்பட்டு ஒரு துண்டு ரொட்டிக்காக கையேந்தி நின்ற போது, பணமிருந்தால் கேக் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி அவர்களை துச்சமாக நடத்தினார். விளைவு பிரெஞ்சு மக்கள் கொதித்தெழுந்து அரசிக்கு எதிராக பெரும் களப் புரட்சியை மேற்கொண்டனர். தற்போது தமிழக மக்களும் அதே சொல்லொண்ணா துயர் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

எனினும், இந்த மழை மக்களின் ஜாதி, மத, அதிகார, வர்க்க வேற்றுமைகளைக் களைந்து, வேற்றுமையில் ஒற்றுமை என்னும் நிலையை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இந்துக்களின் வீட்டிலிருந்து உணவும், முஸ்லிம்களின் வீட்டிலிருந்து உடைகளும், கிறித்துவர்கள் வீட்டிலிருந்து அத்தியாவசிய பொருட்களும் என்று மக்களின் மனிதாபிமான ஊற்று, மழையால் ஏற்பட்ட கொடுமைகளையும் தாண்டி, அணை திறந்த வெள்ளமாய் ஓடுகின்றது.

 மக்களின் நடுவே வெளிப்படும் இந்த மனிதாபிமானமும், அன்பும், தேவைகள் பற்றிய தெளிவும் ஆளும் அரசுக்கும் இருந்தால் மிக நல்லது. கடந்த காலங்களில் சென்னையில் புயலும், மழையும், வெள்ளமும் ஏற்பட்ட போதேல்லாம் முதல்மைச்சர்களாக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, பெருந்தலைவர் காமராஜர், தலைவர் கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகியோரெல்லாம் மழைக்காலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நடந்தே சென்று பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் சொன்னதுண்டு. 

இன்றைய முதலமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சரிவர சென்று கூட பார்வையிடவில்லை. வேனிலும், ஹெலிகாப்டரிலும் உலா மட்டும் வந்து பார்வையிட்டதாக செய்திகள் மட்டுமே வந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் அதிமுக பிரமுகர்கள் நிவாரணப் பொருட்கள் கொடுப்பதை விட ஜெயலலிதாவின் படத்தை ஒட்டி கொடுப்பதிலேயே கவனமாகவும், அக்கறையாகவும் இருந்தார்களே ஒழிய மனித நேயத்துடன் நடந்து கொள்ளவில்லை. இந்த நிலைமையிலும் அரசு பரிபாலனங்களை நம்பாமல் மக்கள் சக்தி, ஜனதிரளாக உருவாகி இந்த பேரிடரில் தங்களைத் தாங்களே காத்துக் கொண்டது ஒரு அதிசயமாகும். எனவே, நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்ட கருத்துகளில் நியாயங்களும்,உண்மைகளும் உள்ளதை மறுக்க முடியாது நிலைதான்.

This AIADMK state government headed by Selvi.Jayalalitha, is impotent to take adequate and efficacious measures to solve the serious flood issues in Chennai, Cuddalore and all over Tamil Nadu. Any one cannot blame at this crucial moment, and also criticize each other in this critical situation. we have to join together to face the natural calamity. but the time belongs to our concern to understand the depth of the problem. Marie Antoinette is the main route cause for French revolution. 

The French people were fed up with Marie for cake and single piece of bread with empty stomach and teared eyes. She replied for them with Beat around the bush, which leads to French revolution. Same situation in our Tamil Nadu, which could make the people as protesters against the state government soon, for example the state minsters inspected flood affected areas, people thrown away their anger on them, and they ran away. At the same time, our people forget all the discord, love only Costs an arm and a leg in this flood. 

The state Government must need to learn about some moral responsibilities in this floody situation. We are in the needle point to speak about the truth. All these troubles and this situation leads the people to join the hands and unite the people, to made them to cross the border of religion, cast and other inequality.people's force sort out all miseries and troubles we face in last one week. people's consolidation is only sovereignty in the democracy.

அன்றைய சென்னை நீர்நிலைகளின் இன்றைய நிலை:

https://web.facebook.com/photo.php?fbid=1682052602084422&set=a.1440211136268571.1073741830.100008390956876&type=3&theater

#ksr_posts #ksradhakrishnan #floodsinchennai

 -கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
06-12-2015.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...