Thursday, December 17, 2015

தொடர்ந்து சாகித்ய அகாடமி விருது அள்ளும் நெல்லைச் சீமை திருநெல்வேலி : தொடர்ந்து நான்காவது ஆண்டாக நெல்லையை சேர்ந்தவர், இந்த ஆண்டும் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அரசு இலக்கியத்திற்கு வழங்கும் ஆகச்சிறந்த விருது சாகித்ய அகாடமியாகும். ஆண்டுதோறும் பல்வேறு மொழிகளில் சிறந்த படைப்பிற்கு விருது வழங்கப்படுகிறது. 2014ம் ஆண்டுக்கான தமிழுக்கான சாகித்யஅகாடமி விருது, எழுத்தாளர் ஆ.மாதவன் எழுதிய "இலக்கிய சுவடுகள்' என்ற திறனாய்வு கட்டுரை தொகுப்பிற்கு வழங்கப்புடுகிறது. 2013ல் சென்னை ராஜேஸ்வரி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது இந்த தொகுதிப்பு. ஆ.மாதவன் 1934ல் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். தந்தை ஆவுடைநாயகம். நெல்லை மாவட்டம் செங்கோட்டையை பூர்வீகமாக கொண்டவர். தாயார் செல்லம்மாள். கன்னியாகுமரிமாவட்டம் கொட்டாரத்தை சேர்ந்தவர். அவரது தந்தை குடும்பத்துடன் திருவனந்தபுரத்தில் குடியேறினார். திருவனந்தபுரம் சாலைத்தெருவில் சிறிய கடைஒன்றை நடத்திவந்தனர். பள்ளிப்படிப்பை முடித்தவர் ஆ.மாதவன். அவரது முதல் கதை 1955ல் 'சிறுகதை' இதழில் வெளியாகியது. பின்னர் மலையாளம் வழியாக நவீன இலக்கிய அறிமுகம் பெற்று தீவிர இலக்கியதளத்தில் செயல்பட்டார். அவரது முதல் சிறுகதைத் தொகுதி மோகபல்லவி. கடைத் தெருக்கதைகள் இவருக்குப் புகழைத் தேடித்தந்த தொகுதி. ஆ.மாதவன் திருவனந்தபுரம் சாலைத் தெருவில் செல்வி ஸ்டோர் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். சாலைத் தெருவை பின்னணியாகக் கொண்டே அவரது பெரும்பாலான கதைகள் அமைந்துள்ளன. 1974ல் ஆ.மாதவனின் முதல் நாவலான 'புனலும் மணலும்' வெளிவந்தது.கரமனையாற்றில் மணல் அள்ளும் ஒரு குடும்பத்தின் கதை அது. அந்நாவல் அதன் யதார்த்தத்துக்காகப் பெரிதும் கவனிக்கப்பட்டது. 1982ல் வெளிவந்த கிருஷ்ணப்பருந்து தான் ஆ.மாதவனின் மிகச்சிறந்த நாவல் என்று விமர்சகர்களால் சொல்லப்படுகிறது. 1990ல் அவரது மூன்றாம் நாவலான 'தூவானம்' வெளிவந்தது. மாதவன் மொழிபெயர்ப்பாளரும்கூட. 1974ல் அவர் காரூர் நீலகண்டபிள்ளை எழுதிய சம்மானம் என குறுநாவலை தமிழாக்கம் செய்தார். 2002ல் சாகித்ய அக்காதமி வெளியீடாக மலையாள எழுத்தாளர் பி கெ பாலகிருஷ்ணனின் இனி ஞான் உறங்ஙட்டே என்ற நாவலை இனி நான் உறங்கட்டும் என்ற பேரில் மொழியாக்கம் செய்தார். மாதவனின் மனைவி பெயர் சாந்தா. இவர்களுக்கு 1966ல் திருமணமானது; கலைச்செல்வி, மலர்ச்செல்வி என்ற இரு மகள்கள் உள்ளனர். 2002ல் மனைவியும் 2004ல் மகனும் காலமாகிவிட்டனர். மாதவன் மகளுடன் வசிக்கிறார். 2010 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருதை பெற்றார். இது இலக்கிய முன்னோடிகளுக்கு இளையோரால் வழங்கப்படும் விருது. தற்போது 82 வயதாகும் மாதவன், உடல்நிலை கருதி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமது பாத்திரக்கடை தொழிலை விட்டுவிட்டார். சாகித்ய அகாடமி விருது துவக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழ் இன்பம் படைப்புக்கு விருது கிடைத்தது. 1965ல் ஸ்ரீராமானுஜர் என்ற நூலுக்காக பி.ஸ்ரீஆச்சார்யா; 1970ல் கு.அழகிரிசாமியின் அன்பழைப்பு; 1978ல் வல்லிக்கண்ணனின் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்; 1983ல் தொ.மு.சி.ரகுநாதனின் பாரதியின் காலமும் கருத்தும்; 1990ல் சு.சமுத்திரத்தின் வேரில் பழுத்த பலா; 1991ல் கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள்; 1992ல் தோப்பில் முகம்மதுமீரானின் சாய்வு நாற்காலி; 2012ல் செல்வராஜின் தோல்; 2013ல் ஜோ டீ குரூசின் கொற்கை நாவல், 2014ல் நெல்லையை சேர்ந்த பூமணியின் அஞ்ஞாடி ஆகியவற்றிற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ச்சியாக நெல்லையை சேர்ந்தவர்களே இந்த விருது பெறுகின்றனர்.

No comments:

Post a Comment

Meenanbakkam old airport bomb blast1984,now cargo #TEAGroup #Panakotai Maheswaran #Kathersan

Meenambakkam old airport bomb blast1984,now cargo #TEAGroup  #Panakotai Maheswaran #Kathersan 1) https://www.thehindu.com/news/cities/chenna...