Tirukural Parliament of India
கடந்த 17.12.2015 அன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் திருக்குறளையும், ஐயன் திருவள்ளுவரையும் வட புலத்தில் கொண்டாடிய விழாவை மறக்க முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் இந்த விழாவை சிறப்பாக செய்திருந்தார். இந்த விழாவில் தினமணி ஆசிரியர் நண்பர் வைத்தியநாதனுக்கும், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கும், கவிஞர் வைரமுத்துவுக்கும், படைப்பாளி ஜோ.டி. குருஸ் ஆகியோரை பாராட்டி விருதுகளும் வழங்கப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பள்ளி மாணவச் செல்வங்கள் 133 பேர் திருக்குறளை அருமையாகப் பாடி ஒப்பித்தது பெருமிதமாக இருந்தது. இது தமிழ் இலக்கிய வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வு என்பது மட்டுமல்லாமல் அ.தி.மு.க. வைத் தவிர்த்து அனைத்துக் கட்சியினரும் இன்னும் வட மாநிலங்களைச் சார்ந்த கட்சித் தலைவர்களும் பங்கேற்றது பெருமையான செய்தியாகும். தமிழுக்கும், தமிழருக்கும் கிடைத்த ஒரு பாராட்டு நிகழ்வாக இருந்தது. தமிழகத்திலிருந்து எங்களைப் போன்றவர்களும் கலந்துகொண்டது மகிழ்ச்சியை தந்தது. இந்த விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் சில....
great job.....
ReplyDeletesuperb...
thamilanda......