Saturday, November 23, 2019

அரசியல்_சூதும்_வாதும் #வீர_மாராட்டியம்.. மகாராஷ்டிர அரசியல் அவலம்...... அன்றும் இன்றும் ‘பவர்-பவார் பாலிடிக்ஸ்’

#அரசியல்_சூதும்_வாதும் #வீர_மாராட்டியம்..
மகாராஷ்டிர அரசியல் அவலம்......
*******************************
ஜனநாயகம் என்கிற சொல்லுக்கு அதிர்ச்சியூட்டும் புது அர்த்தத்தைக் கொடுத்திருக்கிறது மகாராஷ்டிர அரசியல்.

அங்கு சட்டமன்றத் தேர்தல் நடந்தது சென்ற மாதம் 21 ஆம் தேதி. தேர்தல் முடிவு வெளியான 24ஆம்
தேதியிலிருந்தே குளறுபடிகள் துவங்கிவிட்டன.

கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு மொத்தம் 161 தொகுதிகளில் வென்ற பா.ஜ.க.வும், சிவசேனாவும் ஆட்சியமைக்கும் என்று தான் பலரும் எதிர்பார்த்திருந்தார்கள்.
முதலமைச்சர் பதவியை இரண்டு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகள் வகிக்க வேண்டும் என்று தங்களுக்குள் ஒப்பந்தம் இருந்ததாகச் சொன்னது சிவசேனா. அதை மறுத்தது பா.ஜ.க.அதிலிருந்து மாறி மாறி எத்தனை கூட்டணிக்கூத்துகள்?
சிவசேனா தேசியவாதக் காங்கிரஸூடன் கூட்டணி குறித்துப்பேசியது. மத்தியஅமைச்சரவையிலிருந்து வெளியே வந்தது. சரத்பவார்  ஒருபுறம் சிவசேனாவுடனும் பேசினார். காங்கிரசுடனும் பேசினார். திடீரென்று விவசாயிகளின் பிரச்சினை நினைவுக்கு வந்து பிரதமர் மோடியுடனும் பேசினார். எங்கு தலை, எங்கு வால் என்பதை ஊடகங்கள் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில் சென்ற 12 ஆம் தேதி மகாராஷ்டிர குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள்   மந்தகதியில் நடந்து  கொண்டிருந்தன.ஒருவழியாக கூட்டணிப் பேச்சு வார்த்தைகள்  முடிந்து  சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே முதல்வராகப்   போகிறார்   என்று செய்திகள் வெளிவந்தன. சர்த்பவார் அதை   ஊடகங்களிடம்   உறுதிப்
படித்தினார்.

எல்லாமே இன்று காலை மாறிவிட்டன.
தலைகீழ் மாற்றம். டெல்லி செல்ல வேண்டிய மகாராஷ்டிர ஆளுநர் அங்கு செல்வதைத் தவிர்க்கிறார். காலையில்  பா.ஜ.க. முதல்வராக முன்பு இருந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வாகப் பதவியேற்றார். தேசியவாத காங்கிரசின் சார்பில் அஜித்பவார் துணை முதல்வராகப் பொறுப்பு ஏற்றார்,
அதுவரை எந்த ஊடகங்களும் இது பற்றி மோப்பம் பிடித்து எந்தச் செய்தியையும் வெளியிடவில்லை.ஏற்கனவே கூட்டணி குறித்தும், யாருக்கு எந்தப் பொறுப்பு என்பதைக் குறித்தும் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடக்காமல் இந்த அதிசயமான மாற்றம் சாத்தியமில்லை.
ஆனாலும் இந்த மாற்றம் நடந்தபிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவராக சரத்பவார் தங்களை மீறி தன்னுடைய மருமகன் அஜீத்குமார் செயல்பட்டதாகச் சொன்னதும் ஊடகங்களுக்கு மாறி மாறிச் செமையான தீனி கிடைத்தன. 
தேசிய வாத காங்கிரஸ்  ஒரு போதும் பா.ஜ.க.வை  ஆதரிக்காது என்று சொல்லியிருக்கிறார் சரத்பவார்.
இனி தங்களுடைய பலத்தை எப்படி பா.ஜ.க.வும்,அஜீத்பவார் கூட்டணி நிரூபிக்கப் போகிறது என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.
ஐனநாயக அமைப்பு மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கும், தேர்தலுக்கு முன் குறிப்பிட்ட கொள்கை சார்ந்த கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கும் தான் என்ன மதிப்பு இருக்கிறது, தேர்தலுக்குப் பிறகு?  தேர்தலுக்கு முன்  ஒரு நிலை ;தேர்தல் முடிந்ததுமே இன்னொரு நிலை. மற்றொரு கூட்டணி என்றால் இதை யார் செய்தாலும் இந்த நிகழ்வுகள் கடைந்தெடுத்த  சந்தர்ப்பவாதம் இல்லையா?
இந்த அளவுக்கு அரசியல் சூழல் தரம் தாழ்ந்து இருந்தால், ஜனநாயகத்தில் நேர்மை,  நாணயம்,  மதிப்பு பற்றியெல்லாம் பேசி என்ன பிரயோஜனம்?
இன்று மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த இந்த அரசியல் அவலங்கள் நாளை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் நிகழலாம்.

மகாராஷ்டிர நடந்திருக்கிற மாற்றம் அரசியல் உணர்வாளர்களுக்கும், பணம் வாங்கி   வாக்களிக்கும்   நமது வாக்காளர்களுக்கும், இன்னும்    ஜனநாயகத்தில்  குறைந்தபட்ச நம்பிக்கை  கொண்டோருக்கும்  விடப்பட்ட எச்சரிக்கை!

பவார் 27 வயதில் சட்ட மன்ற உறுப்பினர் ஆன 38 வயதில் மாராட்டிய
முதல்வர் ஆனார்.கடந்த 1978 இல், 41 ஆண்டுகளுக்கு முன் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலின் முடிவில், ஆட்சி அமைக்கும் அளவுக்கு யாருக்கும் பெரும்பான்மை இல்லை.

அன்றைய  ஜனதா கட்சி, தனிப்பெரும் கட்சியாக இருந்தது.. எதிர்த்து நின்ற இரு காங்கிரஸ் அணியும்  பிளவு பட்டிருந்த காலம் ,தனித்தனியாக போட்டியிட்டன. இந்திரா காந்திக்கு எதிராக இருந்த காங்கிரஸ்(எஸ்) தலைவர் சரத்பவார். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் சரத் பவார் முதல் அமைச்சராகிறார். ஆனால் இந்த ஆட்சி, ஓராண்டு நடந்து. எதிர்க்கட்சியாக இருந்த ஜனதா கட்சியோடு கூட்டணியாக 38. வயதில் சரத்பவார் முதலமைச்சராகி விடுகிறார்.

அன்று,41 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அதிகார அரசியலை 78 வயதிலும் அரசியல் சதுரங்கத்தில் நடத்துகிறார்  பவார். ராஜினி படேல் போன்றவர்களை  பவார் அன்று புறம் தள்ளினார்.

அன்றும் இன்றும் ‘பவர்-பவார் பாலிடிக்ஸ்’

#மகாராஷ்டிர_அரசியல்_அவலம்

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-11-2019.

#KSRadhakrishnan_postings
#KSRpostings


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...