#இப்போதும்_நாங்கள்_இந்தியாவைத் #தான்_நம்புகிறோம்.
————————————————
முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 14.12.1986 தேதியிட்ட கல்கி இதழுக்காக, வேலுபிள்ளை பிரபாகரனிடம் முழுமையான பேட்டி ஒன்று வேண்டுமென்றும், அதற்கான நேரத்தைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் கல்கி பிரியனும் அவரது சகாக்களும் கேட்டுக் கொண்டனர். நேரத்தைப் பெற்றுத் தந்ததும் பிரபாகரனிடம் விரிவான பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது பேபி சுப்பிரமணியனும் நானும் உடனிருந்தோம்.
அந்தப் பேட்டி இடம்பெற்ற இதழ் அண்மையில் பார்வையில் பட்டது. அதில், தேவையில்லாமல் ஒரு பெட்டிச் செய்தி வெளிவந்திருந்தது. அந்தப் பெட்டிச் செய்தியைத் தவிர்த்திருக்கலாம் என நெடுமாறனும் நானும் அப்போது கல்கி பிரியனிடம் வேதனைப்பட்டு குறிப்பிட்டோம். பேட்டியை மட்டும் போட்டிருக்கலாம் என பிரியனிடம் கடுமையாகப் பேசினோம்.
முழுமையான அந்தப் பேட்டியில், பெட்டிச் செய்தி உள்ளிட்ட ஒரு சில செய்திகள் தவிர மற்ற அனைத்தும் இன்றும் நிதர்சனமாக உள்ளது. இந்தப் பேட்டி அந்தக் காலத்தில் பலரால் விவாதிக்கப்பட்டு பேசப்பட்டது. காலச் சக்கரங்கள் ஓடிவிட்டன. ஆனால் எழுத்துக்களால் உருவானவை இன்றும் அடையாளங்களாகவும் சுவடுகளாகவும் திகழ்கின்றன.
அந்தப் பேட்டியின் இணைப்பு கீழே உள்ளன.
-கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
12-11-2019.
#KSRPostings
#KSRadhakrishnan_Postings
No comments:
Post a Comment