Monday, November 25, 2019

மன_அழுத்தம்

#மன_அழுத்தம்
————————
“மனித    இனமே   நோய்வாய்ப்
பட்டிருக்கிறது”  என்றார் ஃபிராய்ட். உடல் சார்ந்த தேவைகளும். சமூகத் தேவைகளும் எண்ணற்ற ஆசைகளும் நிறைவேறாத நிலையில் மனதளவில் இறுக்கம் உண்டாகிறது. விருப்பங்களை அனுபவிக்க அனுபவிக்க இறுக்கமும் தீவிரப்படுகிறது. இறுக்கங்களற்ற மனநிலை வந்து வாய்க்க புலன் இன்பங்களைத் துறக்க வேண்டும் எனறு போதித்தார் புத்தர். வள்ளுவர்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனநலம் பற்றி முதன்முதலாகப் பேசியவர். 

“இன்பத்துள் இன்பம் விழையாதா துன்பத்தில் 
துன்பம் உறுதல் இலன்” 
என்ற வள்ளுவத்தின்படி வாழ்க்கை அமைந்தால் மன அழுத்தத்திற்கு எளிதாக மருந்து கிடைக்கும். வேட்கைதான் வேதனையின் ஆணிவேர். அதை வளர்த்துக் கொண்டே சென்றால், உள மாறாட்டம் (Mental Disorder) உண்டாகிவிடும். மனம் எப்போதும் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். அது தெருநாய்போல் எங்கும் சுற்றும். ‘அங்காடி நாய்போல் அலையும் சிறுமனமே’ என்று பட்டினத்தார் பாடினார். அதை பயிற்சியின் மூலமே பண்படுத்தக் கூடும். மனத்தின் சங்சலங்களைப் பதஞ்சலி முனிவர் துயரம், அகங்காரம், தவறான உணர்வுகள், சுயநலமின்மை, நல்லுணர்வுகள் அனைத்தும் துயரம் தராதவை. அன்பாய் இருப்பவரிடம், சுயநலம் துறந்து வாழ்பவரிடம் மனச்சுமைக்கு இடமில்லை. மன அழுத்தத்திற்கு வழியில்லை.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
25.11.2019

#KSRPosts
#KSRadhakirhsnanposts
#depression
#மன_அழுத்தம்


No comments:

Post a Comment

மா கவி பாரதி

மா  கவி #பாரதியை கொண்டட வலம்புரி ஜானின் இந்த ‘’பாரதி - ஒரு பார்வை’’ யும் (பதிப்பு-1982)அவசியம் வாசிக்க வேண்டும். #பாரதி #வலம்புரிஜானின்_பாரத...