Tuesday, November 19, 2019

இன்றைக்கு (18-11-2019)செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் நினைவுநாள். ________________________________________ செல்வச்செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்து, கோரல்மில் தொழிற்சங்கத் தொழிலாளர்களுக்குத் தன் சொத்துகளை எல்லாம் விற்று உணவளித்து, வங்கக்கடலில் முதல் சுதேசக் கப்பல் விட்ட உத்தமர் வ.உ.சிதம்பரனாரை நினைத்துப்பார்க்க நேரமில்லாமல் யாரோ நயன்தாரா என்ற நடிகையின் பிறந்தநாளை நினைவில் வைத்து கொண்டாடுகின்ற இந்த மாந்தர்களை என்ன சொல்ல? தன்னுடைய இறுதிக்காலத்தில், தூத்துக்குடி சரோஜினி ஜவுளி கடைக்கும், வன்னிய தெரு எண்ணெய் கடைக்கும் எவ்வளவு கடன் வைத்துள்ளேன் என்பதை உயிலில் எழுதிய செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் நினைவு தினம் ... தன் வரலாறுகளை மறந்து சல்லாபங்களிலும், சந்தோஷங்களிலும், வேடிக்கைகளிலும் வெட்டிப்பேச்சுகளிலும் காலத்தைக் கழித்தால் நிலைமைகள் புரையோடித்தான் போகும். இதனால்தான் மாவோயிஸ்ட் போன்ற தீவிரவாதிகள் எழுகின்றனர். இந்த வினைகளை எல்லாம் பார்க்கும்போது முண்டாசுக் கவி பாரதியின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகின்றன. “இன்று பார தத்திடை நாய்போலே ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ நன்று கூறி லஞ்சுவாய் போ போ போ நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ சென்று போன பொய்யெலாம் மெய்யா கச் சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக விழிம யங்கி நோக்குவாய் போ போ போ வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ நூறு நூல்கள் போற்றுவாய், மெய்கூ றும் நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ மாறு பட்ட வாதமே ஐந்நூறு வாயில் நீள ஓதுவாய் போ போ போ சேறு பட்ட நாற்றமும் தூறுஞ் சேர் சிறியவீடு கட்டுவாய் போ போ போ ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ தரும மொன்றி யற்றிலாய் போ போ போ நீதி நூறு சொல்லுவாய் காசொன்று நீட்டி னால்வ ணங்குவாய் போ போ போ தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே தீமை நிற்கி லோடுவாய் போ போ போ சோதி மிக்க மணியிலே காலத் தால் சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ” -கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 18-11-2019. #KsRadhakrishnan #KSR_Posts #VOChidambaramPillai

இன்றைக்கு (18-11-2019)செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் நினைவுநாள். 

________________________________________
செல்வச்செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்து, கோரல்மில் தொழிற்சங்கத் தொழிலாளர்களுக்குத் தன் சொத்துகளை எல்லாம் விற்று உணவளித்து, வங்கக்கடலில் முதல் சுதேசக் கப்பல் விட்ட உத்தமர் வ.உ.சிதம்பரனாரை நினைத்துப்பார்க்க நேரமில்லாமல் யாரோ நயன்தாரா என்ற நடிகையின் பிறந்தநாளை நினைவில் வைத்து கொண்டாடுகின்ற இந்த மாந்தர்களை என்ன சொல்ல? 

தன்னுடைய இறுதிக்காலத்தில், தூத்துக்குடி சரோஜினி  ஜவுளி கடைக்கும், வன்னிய தெரு எண்ணெய் கடைக்கும் எவ்வளவு கடன் வைத்துள்ளேன் என்பதை  உயிலில் எழுதிய செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் நினைவு தினம் ...

 தன் வரலாறுகளை மறந்து சல்லாபங்களிலும், சந்தோஷங்களிலும், வேடிக்கைகளிலும் வெட்டிப்பேச்சுகளிலும் காலத்தைக் கழித்தால் நிலைமைகள் புரையோடித்தான் போகும். 
இதனால்தான் மாவோயிஸ்ட் போன்ற தீவிரவாதிகள் எழுகின்றனர். 

இந்த வினைகளை எல்லாம் பார்க்கும்போது முண்டாசுக் கவி பாரதியின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகின்றன.

 “இன்று பார தத்திடை நாய்போலே 
 ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ 

 நன்று கூறி லஞ்சுவாய் போ போ போ 
 நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ 

 சென்று போன பொய்யெலாம் மெய்யா கச் 
 சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ 

 வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக 
 விழிம யங்கி நோக்குவாய் போ போ போ 

 வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ 
 வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ 

 நூறு நூல்கள் போற்றுவாய், மெய்கூ றும் 
 நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ 

 மாறு பட்ட வாதமே ஐந்நூறு 
 வாயில் நீள ஓதுவாய் போ போ போ 

 சேறு பட்ட நாற்றமும் தூறுஞ் சேர் 
 சிறியவீடு கட்டுவாய் போ போ போ 

 ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ 
 தரும மொன்றி யற்றிலாய் போ போ போ 

 நீதி நூறு சொல்லுவாய் காசொன்று 
 நீட்டி னால்வ ணங்குவாய் போ போ போ 

 தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே 
 தீமை நிற்கி லோடுவாய் போ போ போ 

 சோதி மிக்க மணியிலே காலத் தால் 
 சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ” 

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
18-11-2019.
 
#KsRadhakrishnan #KSR_Posts #VOChidambaramPillai


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...