Friday, November 15, 2019

உரையாடல்_conversation #விவாதங்கள்_தீர்மானங்கள்

#உரையாடல்_conversation #விவாதங்கள்_தீர்மானங்கள்
—————————————
ஏற்ற இறக்கப் பேச்சுகள் சமுதாயத்தை ஈர்க்கலாம். அதில் கனமான செய்திகளோ சத்தான தகவல்களோ அதிகம் வெளிப்படாது.அவை விவாதத்திலும், உரையாடலும் (conversation) கிடைக்கும். இப்படித்தான் கிரேக்கத்தில் நகர அரசுகளில் விவாதங்களின் வழியாகத்தான் ஜனநாயகம் பிறந்தது. ரோமில் சந்தித்து காரசார உரையாடலில் தான் குடியரசு என்ற தத்துவம் உலகில் தெரிய வந்தது. விவாதம் என்பது மெய்ப் பொருள் காண்பதாகும். பேசாப் பொருள் அறியாச் செய்திகள் என நாட்டிற்கு தெரிவிப்பதென்பது விவாதங்களில் மேடைப்பேச்சும், நாடாளுமன்ற விவாதங்களுக்கு வேறுபாடு உண்டு. 

மேடைப் பேச்சுகளில் கடுமையான கண்டனங்கள் ஏகடியங்கள் மக்களை தன்வசப்படுத்த சில மேடைப் பேச்சாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பேசிக் கொள்ளலாம். விவாதத்திலும் கலந்துரையாடல்களிலும் இடமாறு தோற்றப் பிழைகளும் தவறுகளும் ஏற்படுவதில்லை. ஒரு காலத்தில் தேர்தல் கட்டங்களில் மேடைப் பேச்சுகள் தான் அதிகமாக இருக்கும். 

இன்று படிப்படியாக கூட்டங்கள் குறைந்து வருகின்றன. வார்த்தைகளும் பேச்சுக்களும் விவாதங்களும் ஏதோ வகையில் பயணளிக்க வேண்டும். வெட்டியாகவும் தரமற்ற பேச்சுக்களாக எக்காலமும் அமைந்து விடக்கூடாது. மேடைப்பேச்சை விட்டு தொலைக்காட்சி விவாதங்கள் முக்கிய இட்த்திற்கு வந்துவிட்ட்து. தற்போது தொலைக்காட்சி விவாதங்களும் போகிற போக்கில் வெட்டி விவாதங்களாக மக்களும் எண்ண ஆரம்பித்துவிட்டனர். தனிமனிதர்கள் தங்கள்து கருத்துகளை யூடியூப் மூலமாக வெளிப்படுத்துவது முக்கியத்துவம் பெற தொடங்கிவிட்டது. எதிர்காலத்தில் விவாத தள் மேடைகளை நோக்கி தான் நகரும். இரண்டு பேர் நான்கு பேர் விவாதிக்கும் போது சில மெய்யான கருத்துகளும் புலப்படலாம். 

தனிமனிதர் மேடையில் பேசும் பொழுது அந்த கருத்தை மறுதலிக்கக் கூடிய நிலை இல்லாததால் அந்த பேச்சு அப்படியே இருக்கும். விவாதம் என்பதில் ஒரு கருத்து சொல்லும் போது எதிர்வினைகளும் ஏற்படும் போது சில தரவுகள் மெய்யாக வெளிப்படலாம். எதிர்காலம் இனிமேல் விவாதங்கள், உரையாடலகள் (conversation) , தீர்மானங்கள் நோக்கித்தான் செல்லும்.

பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்.
மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவுமென் வினையா விடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்புட நிணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
- மகாகவி பாரதியார்

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
15.11.2019
#ksrpostings
#ksradhakrishnanpostings
#ksrposts
#உரையாடல்
#discussion
#deliberation


No comments:

Post a Comment

#கனவாகிப்போனகச்சத்தீவு #கச்சதீவு #KanavaiPonaKachaTheevu #Katchatheevu

‘*கனவாகிப் போன கச்சத்தீவு’ என்னும் என்னுடைய விரிவு படுத்தப்பட்ட நான்காவது பதிப்பு வெளிவருகிறது.  நண்பர்கள், ஊடக தோழர்கள், பல்கலைக்கழகம் மற்ற...