-------------------------------------
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறளை இயற்றிய திரு வள்ளுவரைப் பல்வேறுகாலகட்டங்களில் ஓவியர்கள் வெவ்வேறு கோணங்களில் படமாக வரைந்தனர்.திருக்குறள் உலகப் பொதுமறை என்பதால் எந்த ஒரு மதத்துக்குள்ளும் வள்ளுவரைஅடக்க இயலாது. வள்ளுவரின் படத்தை 1950-களில் பாலு சகோதரர்கள்தான் மதச் சின்னங்கள் அற்றவராக வரைந்தனர்
கே.ஆர்.வேணுகோபால் சர்மா, 1964-ம் ஆண்டு வள்ளுவரின் திருவுருவத்தை வரைந்தார். அந்த ஓவியமும் அவருக்கு அவ்வளவு விரைவில் கிட்டவில்லை . தனது திருமணத்தை வள்ளுவரின் உருவத்தை வரையாமல் செய்துகொள்ள மாட்டேன் என்று, 40 ஆண்டுகள் திருக்குறள், ஓவியங்களை ஆய்வு செய்து, அதன் பிறகே வள்ளுவரை வரைந்தார்.
தமிழகசட்டப்பேரவையில்திருவள்ளுவர் படத்தை குறித்து கோரிக்கை எழப்பட்ட
பேரறிஞர் அண்ணா,கலைஞர் ஆகியோர்
வலியுறுத்தினர். பக்தவச்சலம் அதற்க்கு
மாநில அரசு அனுமதி வழங்கும் என்றார்.
முதல்முறையாகஇவரதுஓவியத்தை
வள்ளுவரின்அதிகாரப்பூர்வமான ஓவியமாக சென்னை மாகான ஏற்றுக்கொண்டது. முதல்முறையாக 1964-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி தமிழக சட்ட மன்றத்தில் இவரின் திருவள்ளுவரின் படத்தை அன்றைய துணை ஜனாதி பதி ஜாகீர் உசேன் திறந்துவைத்தார். சட்டசபையில் வேணுகோபால் சர்மா வுக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கப்பட்டு பாராட்டப் பட்டார்.
இவருக்கு ‘ஓவியப் பெருந்தகை’ என்ற பட்டத்தை பேரறிஞர் அண்ணா வழங்கினார்.
சர்மா ஓவியத்தின் அடிப்படையில்தான் திருவள்ளுவரின் தபால்தலை வெளியிடப்பட்டது. வெளியிட்டவர் மத்திய அமைச்சர் கே. சுப்பராயன். அப்போது கூட அவர் படத்தில் ஏன் பூனூல் இல்லை என்று பிரச்சனை எழுப்பப்பட்டது.
வேணுகோபால் சர்மா 1908-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி சேலம் மாவட்டத்தில் பிறந்தார்.தெனாலிராமன் பரம்பரை வழிவந்தவர். மைசூர் சமஸ்தானத்தில் மன்னர் நால்வடி கிருஷ்ணராஜ உடையார் அவையில் ஆஸ்தான விகடகவியாக இருந்தார். சுதந்திரப் போராட்ட வீரரான இவர், நண்பர்களுடன் சேர்ந்து ‘ஸ்வதேச டிராமா பார்ட்டி’ ஆரம்பித்து விடுதலை வேட்கையை தூண்டும் வகையில் நாடகங்களை அரங்கேற்றினார்.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைத் தொடர்ந்து மும்பைக்கு இடம் பெயர்ந்தார். அங்கு பிரபல சினிமா இயக்குநர் ஸ்ரீபகவான் தாதாவிடம் சினிமாவை கற்றுக்கொண்டார். சென்னை திரும்பியவர் கலங்கரை விளக்கம் அருகே ‘கிரீன் பிக்ஸர்ஸ்’ என்ற திரைப்பட நிறுவனத்தை தொடங்கினார். ‘நாத விஜயம்’, ‘தெய்வீகம்’, ‘மை சன்’ ஆகிய படங்களைத் தயாரித்து இயக்கினார்.
இவர் வரைந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத் ஆகியோரின் படங்களும் சட்டப்பேரவைக்குள் இருக்கின்றன.
#பழைய பாடல்
#திருவள்ளுவரெனு நாம
சற்குரு சரணமே சரணம்.
நாயனார் துதி
திருமுடி மிசையார் மயிர்முடி யழகுத்
தீர்க்கபுண் டரநுத லழகும்
திரண்மயி புயந்தை வருஞ்செவி யழகுந்
திகழ்நெடுந் தாடியி னழகும்
அருமுடி செபமா லிகைசின்முத் திரைசே
ரபயநேர் வலக்கையி னழகும்
அமிழ்துறழ் தமிழ்மா மறைமுறை வரத
மமைதரு மிடக்கையி னழகும்
கருமுடி யோகப் பட்டையி னழகும்
கடிகொள்கீட் கோவண வழகும்
கழல்களிற் றிகரி வளைவரை யழகுங்
கமலநல் லாதனத் தழகும்
தருமுடிய முகிறோய் மயிலையி
னிடைமா
தவர்கள்கண் டிறைஞ்ச வீற்றிருக்கும்
தழைபுகழ்த் #திருவள்ளுவரெனு நாம
சற்குரு சரணமே சரணம்.
No comments:
Post a Comment