#தனி_மாநிலக்_கோரிக்கைகள்
——————————————-
சென்னை நகரத்தில் சில இடங்களில் வடமாநிலம் என்ற சுவரொட்டிகள் கண்ணில் பட்டன. சில காலங்களுக்கு முன் மதுரையை தலைமையிடமாக கொண்டு தென் தமிழகம் என்றொரு பிரச்சாரம் எழுந்தது.
அது போல இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்களைக் கொண்டது.இப்படியான கோரிக்ககள் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளது.தமிழ்நாடு மொழிவாரி மாநிலமாகி, இன்றைய எல்லைகள் கொண்ட ’தமிழகம் 60’ என்று தினமணி ஏட்டில் 01-11-2016ல் இது குறித்தான விரிவான பத்தி எழுதியிருந்தேன்.
அசாமில், கர்பி ஆங்லாங்,..
வடகிழக்கு மாகாணப் பகுதிகளில், குக்கிலாந்து....
மேற்கு வங்கத்தில் கோர்க்காலாந்து, காம்டாபூர், போடோலாந்து....
பிகாரில், மிதிலா, போஜ்பூர்...
உத்தரப்பிரதேசத்தில் பிரஜ் பிரதேஷ் அல்லது ஹர் பிரதேஷ் அல்லது பாஸ், அவத், பூர்வாஞ்சல், பந்தேல்கண்ட்....ஜம்மு காஷ்மீரில், ஜம்மு, காஷ்மீர், லடாக்....
மத்தியப்பிரதேசத்தில், விந்திய பிரதேஷ், பகேல்கண்ட் மற்றும் பந்தேல்கண்ட்,
குஜராத்தில், கட்ச், சவுராஸ்ட்ரா, பிளிஸ்டான்...
மகாராஷ்ட்ராவில், விதர்பா, காண்டேஷ், மராத்வாடா...
ஒடிஷாவில், கோஷல்...
கர்நாடகாவில், கரு நாடு, கல்யாண கர்நாடகா, துளு நாடு...
மஹாகோஷல் மற்றும் கோண்ட்வானா, மால்வா....
இவைதவிர, சிந்தி பிரதேஷ், என்ற ஒன்றை அமைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளன...
புதுவையை தனி மாநிலமாக அறிவிக்க நீண்ட காலமாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
#தனி_மாநிலக்கோரிக்கைகள்
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09-11-2019
No comments:
Post a Comment