சகுந்தலை துஷ்யந்தனோடு கூடுவதற்கு முன் ஒரே ஒரு சத்தியத்தை அவனிடம் வேண்டினாள்.
"நான் உங்களை என் கணவராக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் ஒரு சத்தியம் செய்யுங்கள். நமக்கு பிறக்கும் குழந்தை தான் இந்த தேசத்தை ஆள வேண்டும். அவன்தான் உங்கள் வாரிசு என்று நீங்கள் அறிவிக்க வேண்டும்" என்றாள். துஷ்யந்தனும் சத்தியம் செய்தான். அடுத்த கணம் அவளது இடையில் கையை வளைத்து அவளை இருக அணைத்துக் கொண்டான். இதோடு இதழ் பதித்தான். அவன் கைகள் இடையைத் தாண்டியும் அவள் உடல் முழுவதும் நளினமாடியது. இருவரும் இணைந்தார்கள். கூடினார்கள். கட்டியணைத்துப் புரண்டார்கள். காமத்தில் திளைத்தனர். அவன் அவளை இருக அணைத்துக் கொண்டான். தன் வாக்கை நிறைவேற்றுவேன் என்று மீண்டும் உறுதி அளித்தான். அவளோடு நேரம் செலவிட்ட பின்பு, கண்வ மகரிஷி திரும்பி வந்தால் தன்னை சபிக்க நேரிடும் என்று பயந்து, அரசன் அங்கிருந்து விடைபெற்றுப் படைப் பரிவாரங்களோடு நாடு திரும்பினான். கண்வ மகரிஷி ஆசிரமம் திரும்பினார். சகுந்தலை அவரது காலில் விழுந்து அழுதாள். தனக்கு நிகழ்ந்ததைக் கூறினாள். தானும் அவனை விரும்பியதை வெளிப்படையாகத் தெரிவித்தாள். "அவரைச் சபித்து விடாதீர்கள்" என்றாள். மகரிஷி புரிந்து கொண்டார். அவளுக்குப் பிடித்தவனைத் தேர்வு செய்ய அவளுக்கு உரிமை உள்ளது. காதல் மயக்கத்தில் தன்னை இழந்து விட்டாள். இதுவும் விதியின் விளையாட்டே என்று உணர்ந்து கொண்டார். "துஷ்யந்தன் மிகவும் நல்லவன் என்று கேள்விப்பட்டுள்ளேன். அவன் கண்டிப்பாக உனக்காகத் திரும்பி வருவான்" என்று ஆறுதல் கூறினார். காலங்கள் உருண்டோடின. அவர்களின் கூடலின் விளைவாகச் சகுந்தலையின் வயிற்றில் கரு உண்டானது. குழந்தை பிறந்தது. சத்திரியருக்கு உண்டான அத்தனை அம்சங்களும் அந்தக் குழந்தையிடம் இருந்தன. அந்தணர்களின் வழிகாட்டுதலில் இயற்கைச் சூழலில் மிக ஆரோக்கியமாக அவன் வளர்ந்தான். அனைத்து கலைகளிலும் வல்லவனாக இருந்தான். ஆனால், இத்தனை காலமாகியும் தனது கணவன் தன்னைத் தேடி வராததைக் கண்டு சகுந்தலை கண்கலங்கினாள். கண்வ மகரிஷி தனது மகளை எவ்வளவு தேற்றியும் அவளால் படும் துன்பத்தைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. "கணவன் வரவில்லை என்றால் என்ன, கணவன் இருக்கும் இடத்தை நோக்கி மகளும் செல்லலாம் என்பதும் நியதியே. நீ இங்கிருந்து உனது கணவன் இருக்கும் இடம் நோக்கிச் செல். உன் மகனையும் அழைத்துக் கொண்டு செல்" என்றார். சகுந்தலையும் அவர் கூறுவதில் உள்ள அர்த்தத்தைப் புரிந்து கொண்டு காட்டிலிருந்து நாடு நோக்கிப் பயணபட தயாரானாள். தந்தையைப் பிரிவது துயரமானதாக இருந்தாலும், அது அவசியம் என்பதை கண்வ மகரிஷி அவளுக்குப் புரிய வைத்தார். சில அந்தணர்கள் துணையோடு காடுகளின் ஊடாக அவள் நீண்ட பயணத்தை மேற்கொண்டு அரண்மனையை அடைந்தாள். அரசனுக்கு விஷயம் கூறப்பட்டது. அந்தணர்கள் வந்திருப்பதை அறிந்து சபைக்கு வந்த அவன் அவர்களுக்கு மரியாதை செய்தான். பல வருடங்களுக்குப் பின் கணவனைப் பார்த்த சகுந்தலையின் கண்களில் கண்ணீர் பெருகியது. ஆனாலும் நாணத்தால் ஒளிந்திருந்து அவனை ரசித்துக் கொண்டிருந்தாள். அதைவிட படபடப்பு அதிகமாக இருந்தது. துஷ்யந்தன் அவளை அழைக்க, மறைந்திருந்த அவள் மெதுவாக வெளிப்பட்டாள். #மகாபாரதம் #சகுந்தலை #காதல்கதை
Subscribe to:
Post Comments (Atom)
தவறை சுட்டிக் காட்டாமல்
தவறை சுட்டிக் காட்டாமல் அடிமையாக இருப்பதை விட... தவறை சுட்டிக்காட்டி வட்டு எதிரியாக வாழ்ந்து விடலாம்! முட்டாள் தனத்தால் ஏமாந்தவர்களை வ...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment