Monday, June 29, 2026
#மேகேதாட்-2
மேகதாது அல்ல! #மேகேதாட் அணைப் பிரச்சனையில் கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி புதிதாக இந்த அணையைக் கட்டுவதன் மூலம் எங்களுக்கு 4.75 டிஎம்சி தண்ணீர் கூடுதலாகக் கிடைக்கும் என்று சொல்லி உள்ளார். அதன் மூலம் மின்சார உற்பத்தியும் பெங்களூருக்குக் குடிநீர் தேவையையூம் பூர்த்தி செய்து கொள்வோம் அதுவே தமிழகத்திற்கும் ஒரு விதத்தில் பயனாக இருக்கும் என்று கதை விடுகிறார். இந்தக் கதையை எல்லாம் விட நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த வைகோ அவர்கள் கர்நாடகாவில் மேகேதாட் அணை வருவதற்கு மோடி தான் காரணம் என்று முழு நீளத் திரைப்படமே ஓட்டுகிறார். இந்த வைகோவின் நிலைமை இப்படி ஆகிவிட்டது என்பதே சமீபகாலக் கவலை ஆகிவிட்டது! எதை எடுத்தாலும் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பது மாதிரி எதையாவது ஒன்றைச் சொல்லிக் கொண்டு இன்றைக்கு எதிலும் நிலைபெற முடியாத தனது தடுமாற்றங்களுக்கு இடையே மோடி!பாஜக என்று சொல்லி தன்னை நிலைநிறுத்தப் பார்க்கிறார்! இவர் பாஜக கூட்டணியில் சேராத மாதிரி அள்ளி விடுகிறார்.
பிரதமர் மோடி தான் காரணம் என்பதை இவர் எங்கே கண்டுபிடித்தார்? கர்நாடகாவில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி! அந்தக் காங்கிரஸ் ஆட்சிக்கு மோடி எப்படி உதவி செய்வார். உண்மையைச் சொன்னால் கர்நாடகாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே இருக்கும் மேகாதாட் அணை நீர் மேலாண்மைப்பிரச்சனைகளுக்கு இடையே எந்தவித அனுமதியுமின்றி எந்த ஒரு அணையையும் இடைக்காலத்தில் கர்நாடகா கட்டக்கூடாது என்று பாரதிய ஜனதா அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்திருக்கிறது என்பது எல்லாம் இவருக்கு தெரியாதா? பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடுமா? எதையும் தெரிந்து கொள்ளாமல் இப்படித் திடீர் என்று ஒரு கப்சா விடுவதன் மூலம் அவர் என்ன சாதிக்க விரும்புகிறார்? நுணலும் தன் வாயால் கெடும் என்பதற்கு வைகோ தான் சாட்சி! மேகேதாட் சிக்கலை இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு சரியான புரிதலும் இல்லை.
இதற்கிடையில் மேகதாது அணை கட்டுவதற்கான எதிர்ப்புணர்வை தீவிரப் படுத்துவதோடு இதனால் நமக்கு ஏற்படும் பற்றாக்குறையையும் நமது விவசாயிகளுக்கான டெல்டா பகுதி பாதுகாப்பிற்கும் வெகுவாக போராட வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். கர்நாடகா 1969 முதல் 1975 வரை ஹேமாவதி, கபினி, ஹேரங்கி போன்ற அணைகளை எந்தவிதமான அனுமதியும் இன்றியும் நமது ஒப்புதல் இன்றியும் இதனால் பிற மாநிலங்களுக்கு என்ன பாதிப்பு என்பதையும் கூட அலட்சியப்படுத்திவிட்டு தங்களுக்குள்ளே கட்டிக் கொண்டு விட்டார்கள். மேற்படி அணைகள் கட்டப்படுகிற நாளில் தமிழகம் சார்பில் எந்தவிதமான எதிர்ப்பும் தீவிரமாகக் காட்டப்படவில்லை.
உண்மையில் 1924ல் பிரிட்டிஷாரின் காலத்தில் மைசூர் அரசருக்கும் சென்னை ராஜதானிக்கும் இடையே ஏற்பட்ட காவிரி நீர் ஒப்பந்தம் 1975இல் மறுபடியும் புதுப்பிக்கப்பட்டு இருக்க வேண்டும். நமது கலைஞர் அதை முறையில் தவறவிட்டார். அவருக்குச் சினிமாப் பிரச்சாரம் குடும்ப வளர்ச்சி போன்ற துறைகளில் இருந்த ஆர்வம் ஒரு மாநில அரசின் முதல்வராக இருந்த காலத்தில் செய்திருக்க வேண்டிய காரியங்களின் மீது ஏனோ கவனம் இல்லாமல் செய்துவிட்டது.அது ஒரு கெடுவினைதான் . அந்த ஒரு தவறு பிற்கால தமிழகம் நலன் சார்ந்த நடவடிக்கை எல்லாவற்றிற்குமே எதிராக முடிந்து விட்டது. அது ஒருபுறம் இருக்க அன்றைய கர்நாடக முதல்வர் அர்ஸ் படு விபரமாக பேச்சுவார்த்தை மூலம் பல்லாயிரம் ஹெக்டேர் நிலங்களுக்கு நீர் தேவைப்படுகிறது என்று கோரி கபினி ஹேமாவதி ஹேரங்கி என மூன்று அணைகளைத் தொடர்ந்து தனது எல்லைக்குட்பட்ட காவிரிப் பகுதியில் கட்டிக்கொண்டார். இன்னும் விட்டால் அவர்கள் அணைகளைக் கட்டத் தான் செய்வார்கள்.
இப்படித் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவர்கள் எல்லாம் பதவி கிடைத்தால் போதும் பணம் பண்ணினால் போதும் என்று அவரவர்கள் குடும்ப நலன்களையும் வாரிசு நலன்களையும் பெருக்கிக் கொண்டு மாநில உரிமைகள் குறித்த பிரச்சினைகள் மீது பாராமுகமாக இருந்திருக்கிறார்கள்! சீசன் சமயங்களில் வழக்குகள் போட்டிருப்பதாகக் காரணம் காட்டியோ சமயத்தில் மத்திய அரசுகளின் ஆலோசனை குழுக்களில் ஆஜராகமல் இந்த நதிநீர்த் தாவாக்களை ஒத்தி போட்டுக் கொண்டே வந்து விட்டார்கள். இதனால் தமிழக தஞ்சை டெல்டா விவசாயிகள் மட்டுமல்லாமல் தமிழகத்திற்கு தேவையான அடிப்படைக் குடிநீர் தேவைகள் முதல் பல்வேறு உற்பத்திகள் வரை எவ்வளவு தூரம் நமது மாநிலம் மோசமாகப்பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை ஒருவரும் உணர்ந்ததாக தெரியவில்லை! இந்த விஷயத்தை ஒருவர் சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் ஆனால் இதனுடைய விளைவுகள் எதிர்காலத்தில் கடும் சிக்கலை உருவாக்க கூடியவை இப்படியே போனால் எதிர்காலத்தில் கடும் வறட்சி மாநிலமாக தமிழகம் அவலப்படப் போவதை இவர்கள் யாரும் முன்னுணர்ந்ததாகத்
தெரியவில்லை. அவ்வப்போது ஆட்சியாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஏதோ அறிக்கைகள் கொடுத்தோம்
Subscribe to:
Post Comments (Atom)
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment