Monday, June 29, 2026

நமது கடமை முடிந்தது என்பது மாதிரி தங்கள் சொந்த வேலைகளைப் பார்க்கத் திரும்பி விடுகிறார்கள்.

 நமது கடமை முடிந்தது என்பது மாதிரி தங்கள் சொந்த வேலைகளைப் பார்க்கத் திரும்பி விடுகிறார்கள். அதிகம் மிஞ்சினால் மக்கள் முன்பு தொலைக்காட்சியில் இது பற்றி விவாதித்தோம் என்று கண் துடைப்பு செய்து கொண்டு இருக்கிறார்கள்! இந்தத் தாமதம் நல்லபடியாக முடியப் போவதில்லை! நாளை இதனால் ஏற்பட போடும் விளைவுகளுக்கு இன்றைக்கு பதவியில் இருக்கக்கூடிய

த வெ க அரசியல்வாதிகள் மட்டுமல்ல ஏற்கனவே இருந்தவர்கள் யாரும் கூடப்பொறுப்பேற்க மாட்டார்கள் பதவி போன பிறகு வீடு திரும்பி விடுவார்கள். கடந்த பல்வேறு கால திமுக ஆட்சியில் மட்டுமல்ல இப்படித்தான் நதிநீர் பிரச்சனைகள் பல்வேறு ஆட்சியிலும் தள்ளிப் போடப்பட்டு கொண்டே வந்திருக்கிறது! எந்த அக்கறையுமற்று அவர்கள் அந்நியக் கடன்களை வாங்கித்தான் ஆட்சியைச் சமாளித்தார்கள். அந்த நிலை தான் முதல்வர் விஜய் ஆட்சியிலும் தொடர்கிறது! பதவி மோகமும் பணத்தாசையுமே குறி! ஒட்டுமொத்தமாக இந்த நதிநீர் பிரச்சனைகள் பற்றி முதல்வர் விஜய்க்கு என்ன தெரியும்? அவரை நடுவில் வைத்துக் கொண்டு பலரும் வந்து இங்கே அதிகாரம் செய்கிறார்கள். போக கடந்த காலங்களில் இந்திய தேசிய அளவிலான பார்வைகள் மற்றும் மாநில பிரச்சனைகள் குறித்து பேசாமல் தேசியத்தின் மீதான அலர்ஜியிலேயே எல்லாவற்றையும் அவர்கள் இழந்து விட்டார்கள் காமராஜருக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு தேசிய தலைமை உருவாகவில்லை. அந்த வெற்றிடம் இப்போது கேள்விக்குறியாக இருக்கிறது. அதை வைத்துத்தான் நாங்கள் கேட்கிறோம்.அன்றைக்கு கர்நாடகா ஹேமாவதி கபினி ஹேரங்கி போன்ற அணைகளைக் கட்டும் போது தமிழ்நாட்டிடம் அனுமதி கேட்டார்களா? அன்றைக்கு ஆட்சியில் இருந்தவர்கள் யார்? அதை நினைத்துப் பார்க்க வேண்டும்! இதுவரை நடந்த இந்த நதிநீர் தாவாக்களைப் பின்னோக்கிப் பார்க்கும் பொழுது காவிரி நீரில் தமிழகத்திற்கு உள்ள உரிய டிஎம்சி நீரினை இன்னும் முழுமையாக பெற முடியவில்லை!அவ்வப்போது தற்காலிகத் தீர்வு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான உச்ச நீதிமன்ற விசாரணை குழு இன்னும் அமைக்கப்படவில்லை. இன்றைக்கு கேரளாவிலும் முல்லைப் பெரியாறிலும் அணை கட்டத் தயாராகி விட்டார்கள். கடந்த இரண்டாயிரத்தில் இருந்து கன்னியாகுமரி நெய்யாறு பாசனத்திற்கென திறக்கப்படாமல் மூடப்பட்டே கிடக்கிறது. அடவி நயினார் அணைக்கு நீர் வருவதைக் கேரளா அரசு தடுத்து விட்டது. அச்சங்கோயில் பம்பை வைப்பாறு இணைப்பு அதுபோல ஆழியாறு பரம்பிக்குளம் பாண்டி ஆறு புன்னம்புழா சிறுவாணி அமராவதி போன்ற நதிகளில்இருந்தும் நீர் தர கேரளா மறுக்கிறது! அதேபோல் ஆந்திரத்துடன் பொன்னியாறு பாலாறு பிரச்சனைகள் இன்னும் தீரவில்லை. தமிழ்நாட்டில் தாமிரபரணி ஆறு மட்டுமே நாள் தோறும் ஓடி புன்னைக்காயல் பகுதியில் கடலோடு கலக்கிறது! இவற்றையல்லாம் நினைத்துப் பார்க்க யாருக்கும் நேரமில்லை! 60 70 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் பலரும் இதைப் பற்றிப் பேசாமல் தீவிரப்படுத்தாமல் போராடாமல் காலத்தைக் கடத்தி விட்டார்கள். அந்த வகையில் எதிர்காலத்தில் தமிழ்நாடு பெரும் நீர்பாசனப் பிரச்சனைகளைச் சந்திக்க இருப்பதை மனதில் கொண்டு இதற்காக முன்கை எடுக்க வேண்டியவர்கள் தாமதப்படுத்தியதால் ஏற்பட்ட விளைவுகளையும் கவனத்தில் கொண்டு தமிழக பாரதிய ஜனதாக் கட்சி இந்த நதிநீர் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து தனது போராட்டங்களை அவசரகாலப் பிரச்சனைகளாகக் கருதி தொடர்ந்த போராட்டங்களை தேசிய இறையாண்மை கருதித் தமிழகமெங்கும் நடத்த இருக்கிறது. #cauveri #maghdat #காவேரி #ksrpost 22-6-2023.

No comments:

Post a Comment

We all #supportGyaneshKumar CEC

  We all #supportGyaneshKumar CEC