த வெ க வின் முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே மிக மோசமான முறையில் பாலியல்க் குற்றங்கள் மற்றும் பல்வேறு வகையான கொலைகளும் தொடர்ந்து தமிழகத்தில் நடந்து வருவது மிகுந்த கவலைக்குரியதும் எச்சரிக்கை செய்ய வேண்டியதுமாக இருக்கிறது. ஏறக்குறைய சட்ட ஒழுங்கு என்பது அரசால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கை மீறிச் சென்று விட்டதையே இது காட்டுகிறது.
இவற்றை மக்கள் முன்பு கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களது தலைமையில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கண்டனக் கூட்டம் இன்று , 18-6-2026 காலை நடந்தது. பெருவாரியாகப் பாரதிய ஜனதாக் கட்சி ஊழியர்களும் மகளிர் அணியைச் சேர்ந்த பெண்களும் பொதுமக்களுமாகக் கலந்துகொண்டு நாட்டில் நடக்கும் இத்தகையை கேடுகளுக்கு எதிராக ஒருமித்த குரலில் தங்களது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தினார்கள். அது ஒரு எழுச்சிமிக்க ஆர்ப்பாட்டமாக நிகழ்ந்தது.இதில் பங்கேற்றேன் கடந்த ஒரு மாதத்திற்குள் நடந்த அனைத்து வன்முறைகளும் பாலியல் கொடுங்கோன்மைகளும் எந்தெந்த ஊரில் எங்கு நடந்தது என்பதற்கான பட்டியலும் இங்கே இணைக்கப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கு ஒரு பாலியல் குற்றம் என்பது போல இந்த ஆட்சியில் மாநிலமெங்கும் மிக மோசமான சூழல் நிலவுகிறது. ஓட்டு போட்டவர்களோ மௌனித்து என்ன நடக்கிறது என்பதே புரியாமல் இருக்கிறார்கள்!. இந்த அரசு ஒரு மோசமான துவக்கத்தில் இருக்கிறது! எங்கு பார்த்தாலும் மின்தடை ஒரு புறம்! சட்டம் குடிமையியல் அரசு என்பது குறித்து தெரியாத புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மறுபுறம்! என மிகுந்த குழப்பத்தில் இந்த ஆட்சி நீடிப்பது சரியானது தானா என்கிற ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னவற்றை இதுவரை முதல்வரால் நிறைவேற்ற முடியவில்லை! அதற்குப் பதிலாக பற்றாக்குறை அதிகக் கடன் என்பவற்றை காரணம் காட்டி கண் துடைப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். எங்கே வைத்து பெண்களுக்கு 2500 மாணவர்களுக்கு 4000 பெண்களுக்கு 5000 கொடுப்பதாகச் சொன்னவர்கள் அந்த இடத்திலேயே தலைமறைவாகி விட்டார்கள். போக ஆறு சிலிண்டர்கள் இலவசம் மகளிர் உதவித்தொகை முதியோர் மற்றும் மாணவர்களுக்கான உதவித்தொகைகள் இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா! சொல்லிவிட்டாரே ஒழிய இதற்கெல்லாம் முதல்வர் வாயைத் திறப்பதில்லை! கூறுகெட்ட மாடு 100 கட்டுப் புல்லு தின்ன கதையாக இருக்கிறது! எதுவும் நடக்கவில்லை எல்லாம் வெறும் அறிவிப்பாக இருக்கிறது! தினமும் நடிகைகளைச் சந்திக்கிறார்!! இந்தப் பாலியல் குற்றங்கள் நடந்த இடத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறவும் இல்லை! சட்ட ஒழுங்கை முறைப்படுத்தவோ அனைத்து குற்றங்களளையும் இரும்பு கரம் கொண்டு அடக்கவோ நேரம் இருப்பதில்லை. முதல்வரைத் தவிர பலரும் அதிகாரம் உள்ளவர்களாகத் தென்படுகிறார்கள்!!இதையெல்லாம் அவர்களுக்கு நினைவூட்டும் வகையில் அல்லாமல் இவர்களது ஆட்சியில் நடக்கும் அனைத்து முறைகேடுகளுக்கும் எதிராகப் பாரதிய ஜனதா தனது போராட்டத்தை தொடர்ந்து நடத்தும். #தமிழகத்தில்பாலியல் #tamilnadulawandorder #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்
Subscribe to:
Post Comments (Atom)
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment