#தூத்துக்குடிவடக்குமாவட்டசுற்றுப்பயணம்
—————————————————— இன்று 22-6-2026,எனது பணிகளின் இரண்டாவது நாள். தூத்துக்குடி பா ஜ க கட்சிக் வடக்கு மாவட்டம் சார்பில் சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்டத் தலைவர் திரு சரவணக் கிருஷ்ணன் மற்றும் ஜோதிராஜ் போன்ற பல நிர்வாகிகளுடன் இன்றைய மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் மேலும் நாட்டின் பிரதமர் மோடி அவர்களின் சாதனைகள் குறித்து எழுதப்பட்ட ஐந்து நூல் தொகுதிகளை எட்டயபுரம் பாரதி மண்டப நூலகத்தில் வழங்கி , கரிசல்காட்டு எழுத்தாளர்கள் கோவில்பட்டியைச் சுற்றியுள்ள முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் அனைவருக்கும் வழங்கினோம். குறிப்பாகச்சொன்னால் 25 ஆண்டுகளுக்கு மேலாக நெடுநாள் கழித்து அவர்களைச் சந்திக்கும் ஒரு நல்வாய்ப்பு கிடைத்தது ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வாகும். அப்படியான நல்லதொரு வாய்ப்பைத் தந்தமைக்கு தமிழக மாநிலத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்! இந்தப் பயணத்தில் நாராயணசமி காரிய கர்த்தா அவர்களின் வீட்டில் உணவு சமைத்து அன்புடன் பரிமாறி அனைவரும் உண்டு மகிழ்ந்ததை மறக்கவே இயலாது! அதன் பிறகு அங்குள்ள காரிய கர்த்தாக்கள் உறுப்பினர்கள் யாவரையும் சந்தித்து தொடர்ந்து இந்த மாவட்டத்தின் நலன்களுக்குரிய திட்டங்களையும் அதன் எதிர்கால வளர்ச்சிக்குரிய வாய்ப்புகளையும் கலந்து பேசி ஆலோசித்தோம். அத்துடன் அங்கு நிலவும் அரசியல் சூழலையும் எதிர்காலத்தில் பாரதிய ஜனதாவின் வளர்ச்சிக்குரிய வாய்ப்புகள் என்னென்ன இந்த மாவட்டத்தில் இருக்கிறது என்பதையும் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியத்தையும் பேசினோம். மேலும் இந்த கரிசல் மண்ணில் விவசாயிகளின் நலன்களுக்கு என்னென்ன முன்னெடுப்புகள் செய்ய வேண்டியதிருக்கிறது என்பதை எல்லாம் கேட்டும் கலந்தும் பேசியும் முடிவு செய்தோம்!. கோவில்பட்டி தனி மாவட்டம் மற்றும் புதியாக பாஜக அலுவலகம் கட்ட வேண்டிய தேவையை குறிப்பிட்டனர். அந்த வகையில் இந்தப் பயணத்தில் இரண்டு நாட்களாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட காரிய கர்த்தாகள உறுப்பினர்களையும் நிர்வாகிகளையும் கலந்து ஆலோசிக்கும் வகையில் ஒரு ஏழு எட்டு நிகழ்ச்சிகள் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது! அனைத்திலும் கலந்து கொண்டு மிக உற்சாகமாக நடைமுறைக் காரியங்களை முடிவு செய்தோம். அனைத்தும் நல்ல விதமாக நடந்தது! இதற்கிடையில் பாடிப்பறந்த குயில் பாரதியாரின் நினைவு இல்லத்தில் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்து பலவற்றையும் பேசி அங்கே தங்கி இருந்தது என்னை பொறுத்தவரை தனி ஒரு மகிழ்ச்சியையும் நிம்மதியும் தந்தது.! #பாஜக #BJPNEWS #தூத்துக்குடி #கோவில்பட்டி #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்
Subscribe to:
Post Comments (Atom)
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment