#தந்தையார் புகழ் என்றும் வாழ்க!
பிறந்து வளர்ந்த அறியாப் பருவத்தில் நம்மைத் தோளில் ஏற்றி நல்லவனவற்றைக் காண்பித்து அதற்குரிய வழிகாட்டியாக இந்த உலகத்தை அறியத் தரும்படி பல்வேறு அறிவுகளைக் கற்பித்தவர்கள்தான் தந்தை எனும் மகா மனிதர்கள்.நமக்கு நல்ல ஆசனாகவும் சின்னஞ்சிறு பிள்ளைத் தவறுகளை சீர்திருத்தி அவர்கள் வழிநடத்தும் போது இந்த உலகத்தின் பல்வேறு நடத்தைகளையும் அதற்கு ஏற்ப நமது சிந்தனை முறைகளையும் நாம் அறிந்து கொள்கிறோம். இலட்சியங்கள் யாவற்றையும் வகுத்தளித்த அத்தந்தையரின் நினைவுகளை யார் ஒருவரும் தாங்கள் உள்ளளவும் மறக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் வழிகாட்டுதல்கள் நடத்தை முறைகள் நம்மை உள்ளிருந்து இயங்கும் அக புற ஆற்றலை எப்போதும் நமக்கு வழங்கிக் கொண்டே இருக்கக்கூடியவை. மாதா பிதா குரு என்ற அளவில் மூன்றுமாய் இருக்கக்கூடிய தந்தையர்களும் உண்டு. எனது 17 வயது வரை, எனக்கு துணிவை அளித்துதம் பாதுகாத்தும் எனது வாழ்வில் பாதையை வகுத்து தந்தவர் எனது தந்தை கிராம முனிசீப் கே. வி. சீனிவாசன் அவர்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் ஐசிஎஸ்(இன்றைய ஐஏஎஸ்) பதவி கிடைத்ததும் சுதந்திர போராட்ட வீரர் , திலகரின் ஆதரவாளர், வ உசி யின் நண்பர் ஆவார்; எனது பாட்டானர் ஆர்.வெங்கடசல நாயுடு அந்த பதவி ஏற்க கூடாது என மறுத்து விட்டார். தமிழக முதல்வர்கள் ஓமந்தூரர், ராஜபாளையம் பிஎஸ்கே. குமாரசாமி ராஜா, காமராஜர் மற்றும் என்ஜி. ரங்கா, செல்ப்பாண்டியன், முன்னாள் அமைச்சர் மஜித் எஸ் ஆர் நாயுடு , ரா. கி என காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்களோடு நெருக்கமாக நட்பு கொண்டிருந்தார். உலகம் அறியாச் சிறுவனாக இருந்தது முதல் ஆசானாகவும், வழிகாட்டியாகவும் தன் பிள்ளைகளை நாட்டுக்காகச் சிந்தனை செய்யும் முறையில் வளர்த்தெடுத்த தந்தையர்களை நினைத்து , உலக தந்தையர் தினமான இந்நாளில் அவர்களைப்போற்றி வணங்குவோம். பாரதி பாடிய எந்தையர் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்கிற வரிகள் இன்று நினைவுக்கு வருகின்றன. அவர்களின் நினைவை என்றென்றும் போற்றுவோம்! தந்தையார் புகழ் என்றும் வாழ்க! #Happyfathersday
Subscribe to:
Post Comments (Atom)
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment