“கிடைத்த சோபாவில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்பவர்கள்.”
இன்றைக்கு த வெ க வின் கூட்டணியில் இருப்பவர்கள் அதில் சேர்ந்தவர்கள் தங்களை நியாயப்படுத்த ஆளாளுக்கு ஒரு காரணம் கூறுகிறார்கள். அது குறித்து த வெ கவும் தனது நிலைப்பாட்டைச் சொல்கிறது. சரி அது அவர்களின் கூட்டணி தர்மம். சிபி ஐ சிபிஎம் போன்ற இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை யாரிடமும் காசு வாங்காமல் வேலை பார்ப்பார்கள் என்பது ஒரு நம்பிக்கை. ஆனால் ஏறக்குறைய மூன்று நான்கு முறை திமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தல் செலவிற்கு திமுகவில் இருந்து பணம் வாங்கிப் பிறகு தேர்தலில் வெற்றியும் பெற்றார்கள். சிபிஎம் ஐப் பொறுத்த வரையில் அதனுடைய இலக்கிய பிரிவு என்று சொல்லுகிற த மு எ க ச ஆட்கள் தான் ஏறக்குறைய திமுக ஆட்சியை நடத்தினார்கள்.அவர்கள் தான் ஸ்டாலினுக்கு பல்வேறு வகையில் இலக்கிய அரசியல் பொருளாதார கருத்துக்கள் என்ற பெயரில் முட்டுக் கொடுத்தார்கள். புத்தக கண்காட்சிகள் புத்தகத் திருவிழாக்கள் இவர்களது புத்தகங்களை அரசு செலவில் அச்சிட்டுக்கொள்வது இவர்கள் சொல்பவர்களுக்கு விருது என்றெல்லாம் மேடைக்கு மேடை கொண்டாடினார்கள் விழா எடுத்தார்கள். இப்போது சிபிஎம் க்கு திமுக கசக்கிறதா? ஆடத் தெரியாமல் தெருக்கோணல் என்கிற மனநிலையில் இருக்கிறார்கள் போல. கலைஞருக்கு நான் சத்தியம் செய்து கொடுத்தேன் ஸ்டாலினை நான் காப்பாற்றுவேன் துணையாக இருப்பேன் போர்வாளாக இருப்பேன் தோளாக இருப்பேன் அவருக்குப் பாதுகாவலனாக இருந்து வழிநடத்துவேன் என்று காஞ்சிபுரத்தில் பேசியவர் வைகோ! தொடர்ந்து திராவிட இயக்கங்கள் ஒன்று சேர வேண்டும் என்று சொன்னால் இந்த தமிழ் தேசியம் பேசுபவர்களை ஒழிக்க வேண்டும் என்றும் சொன்னார். அவர்கள் திராவிடத்தைகாலி செய்வதற்கே தமிழ் தேசியத்தைப் பேசிக்கொண்டே ஏமாற்றுகிறார்கள் என்றும் சொன்னார். அதன் அடிப்படையில் திமுக அதிமுக ஒன்று சேர வேண்டும் என்று சொன்னவரும் அவர்தான். ஆனால் இப்போது வந்து அதிமுகவும் திமுகவும் சேர்வது என்ன வகையில் நியாயம் என்று கேட்கிறார். திராவிடத்தை அழிப்பதற்காக வேலை செய்கிறார்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் திராவிட இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என்று சொன்னதெல்லாம் பம்மாத்தா? பதவி சுகமா? இப்படி எல்லாம் சொன்னவர் அதிமுக திமுக கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைப்போம் என்கிறார்கள் அது எப்படி சரியாகும் என்று இப்போது வந்து கேட்கிறார்!. அப்போது ஒரு பேச்சு!இப்போது ஒரு பேச்சு! இது என்ன அரசியல் தார்மீகம் என்று தெரியவில்லை.! இவர் திமுக கூட்டணியில் நின்ற போது இரண்டு எம்எல்ஏக்கள் உதய சூரியன் சின்னத்தில் நின்றவர்கள் த வெ க வில் இணைய மறுத்து திரும்பவும் திமுகவிற்கே போய்விட்டார்கள். இவர் மட்டும் தவெகவில் சேர்ந்து கொண்டு குதிரை பேரம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார். குதிரைபேரம் பத்தாதா ஒட்டக பேரம் என்று ஒரு புதிய வார்த்தையை வேறு சொல்கிறார். ஒட்டகபேரம் என்று எங்கே இருக்கிறது? ஒட்டகம் மெதுவாக டல்லாக நடக்கும். ஆனால் ஹார்ஸ் பவர் என்கிற குதிரை பொதி சுமந்தாலும் மிக வேகமாகப் பாயும். ஆக அது வேறு இது வேறு! என்ன அர்த்தத்தில் நிருபர்களிடம் பேசுகிறார் விளங்கவில்லையே ? கேள்வி கேட்பவர்களிடம் அட மென்ட்டாக உனக்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்று பதட்டத்துடன் கோபிக்கிறார். என்ன கோபித்தாலும் நீங்கள் இந்த பேரத்தில் இருக்கிறீர்கள் என்று அவர்கள் எதிர்வினை செய்கிறார்கள். மதி முக வில் மிச்சமாகி த வெ க வில் இன்று வந்து இணைய இருக்கும் இரண்டு எம்எல்ஏ களை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலில் மீண்டும் நிறுத்தினால் நானே வந்து பிரச்சாரம் செய்து அவர்களை ஜெயிக்க வைப்பேன் என்று விஜய் சொன்னதாகச் சொல்லுகிறார். ஏறக்குறைய மதிமுகவை இப்படித்தான் வைகோவே முடித்து வைத்துவிட்டார். இதன் மூலம் இன்னமும் அவரை நம்பிக் கொண்டிருக்கும் சிலருக்குப் பாடம் கிடைத்திருக்கும். பேச்சில் தெளிவும் சுத்தமான வாக்குறுதியும் அவரிடம் இல்லையே? கண்டபடி உளறிக்கொண்டு அல்லவா இருக்கிறார். வாசல் காவலுக்கு வேலை கேட்டு நிற்பது போல இருக்கிறது அவரது நிலைமை. இவர் இத்தனை நாள் எங்கிருந்தாராம் பத்திரிகையாளர்களைக் கேட்கிறார்! நீங்கள் திமுக சார்பில் பேசிக்கொண்டு வந்து என்னிடம் கேள்வி கேட்டால் அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் என்கிறார். நான் என்னும் அந்த மனப்பான்மை அவருக்கு கை வந்த அதிகாரம்! அந்தப் பித்தம் தெளியாமலே கண்டபடி வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டுகிறார். நேற்று வரை நாங்கள் எல்லாம் திமுக என்று சொன்னவர் இன்று திமுக கரப்சன் பார்ட்டி என்கிறார். நீங்கள் தேர்தலுக்கு பணம் வாங்கிவிட்டு அதை கரப்க்ஷன் என்று சொல்வது என்ன வகையான புத்திசாலித்தனம். எல்லாவற்றையும் மறைப்பதற்காக உளறிக் கொட்ட கூடாது. மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள் உங்களுடைய சுயநலமும் நோக்கமும் தெரிந்துதான்
Subscribe to:
Post Comments (Atom)
பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…
பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
No comments:
Post a Comment