Tuesday, June 30, 2026

#ஆதிச்சநல்லூர்அகழாய்வுகள்

 #ஆதிச்சநல்லூர்அகழாய்வுகள்

#AdichanallurArchaeological Site - Oldest In Tamil Nadu ——————————————— வையாபுரி பிள்ளை போன்ற அறிஞர்களின் புலப்படுத்திய தமிழர் நாகரிகத்தின் எச்சங்கள் தமிழ்நாட்டின் தெற்குச் சீமையில் உள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வுகளின் சிறப்புகளாக இன்றளவும் போற்றப்படுகிறது. பாதுகாக்கப்பட்டும் வருகிறது. அதில் சற்று தொய்வும் ஏற்பட்டிருக்கிறது. அவை இன்னும் ஆய்வு செய்ய வேண்டிய விஷயங்களாக தொடர்ந்து இருந்து வருகின்றன என்பதை அதில் ஈடுபாடு உடைய நான் பலமுறை சொல்லி வந்திருக்கிறேன்!அந்த வகையில் அவற்றை உலகம் அறிய செய்ய வேண்டும் என்று நோக்கில் தமிழக பாஜக தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களோடு இணைந்து இந்திய நிதி அமைச்சர் மதிப்பிற்குரிய நிர்மலா சீதாராமன் அவர்களைச் சந்தித்து நாங்கள் வலியுறுத்தினோம். அவரும் இந்தத் தமிழர் தொல் நாகரிகங்கள் போற்றப்பட வேண்டியது என்கிற முறையில் ஆர்வத்துடன் அதற்கான ஆவண செய்ய வேண்டும் என்கிற முறையில் அதற்கு என்னுடைய உதவி எப்பொழுதும் இருக்கிறது என்று உற்சாகமாகச் சொன்னார். இப்படியான தொல் தமிழர் அடையாளம் உலகில் உள்ள பல நாகரிகங்களுக்கும் இணையானதும் தொன்மையானதும் என்று ஞாபகப்படுத்தினார். நாங்கள் வலியுறுத்திய காரணங்களைப் புரிந்து கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம் என்று மகிழ்வுடன் உறுதியளித்தார்! ஏற்கனவே அந்த இடத்தை பார்வையிட்டு உள்ளேன் என்றார்.. #Tirunelveli #AdichanallurArchaeologicalSite #EXCAVATIONS_ADICHCHANALLUR #NirmalaSitharaman #கேஎஸ்ஆர்போஸ்ட #ksrpost



No comments:

Post a Comment

We all #supportGyaneshKumar CEC

  We all #supportGyaneshKumar CEC