Tuesday, September 22, 2026

அமீரக அதிபர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள்,

 அமீரக அதிபர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், இந்தியாவின் புது தில்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெசெஷ்கியானைச் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது, இரு தரப்பினரும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி, பதற்றத் தணிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், அத்துடன் மக்களின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவது குறித்தும் விவாதித்தனர். வெகு அருமையான செய்தி இது. மத்திய கிழக்கில் அமைதி நிலவுவது ஆசிய நாடுகளுக்கு மட்டுமல்ல அனைத்து உலக நாடுகளுக்கும் பொருளாதார ரீதியாக மிக மிக முக்கியமான விஷயம். இதன் பின்னணியில் யார் இருந்திருப்பார்கள் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லைன்னு நினைக்கிறேன், உங்களுக்கே புரிந்திருக்கும்.




No comments:

Post a Comment

Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,

  காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...