தமிழின் குரல் ஓய்ந்தது… ஆனால் அவர் விதைத்த தமிழ் என்றும் ஓயாது!
தமிழறிஞரும், சிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற உலகின் தனித்துவமான நடுவருமான பத்ம ஸ்ரீ பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் ஆழ்ந்த துயரத்தையும் அளிக்கிறது. எளிய தமிழில் ஆழமான கருத்துகளை, நகைச்சுவையும் நயமும் கலந்து மக்களின் மனங்களில் பதிய வைத்தவர். சங்க இலக்கியம் முதல் சமகால வாழ்வியல் வரை தமிழின் செழுமையைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்ற அவரது தமிழ்ப்பணி அளப்பரியது. குறிப்பாக, மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி, தலைமுறைகள் பலவற்றிற்கு தமிழறிவையும் பண்பாட்டையும் விதைத்த அவரது பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். அவர் மறைந்தாலும், அவரது கம்பீரமான குரலும், கனிவான சிரிப்பும், தமிழைச் சொல்லும் தனித்துவமான பாங்கும், அவர் விட்டுச் சென்ற தமிழ் இலக்கியப் பணியும் என்றும் நம்மிடையே வாழும். தமிழன்னை தனது தவப்புதல்வர்களில் ஒருவரை பாரதி நினைவு நாளில் இன்று இழந்திருக்கிறாள். பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் புகழும் தமிழ்ப்பணியும் காலம் கடந்தும் நிலைத்திருக்கட்டும். ஆழ்ந்த இரங்கலுடன், #சாலமன்பாப்பையா
Subscribe to:
Post Comments (Atom)
Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,
காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment