Tuesday, September 22, 2026

பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாள் இன்று!

 பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாள் இன்று!

தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர்திரு பி. எல் .சந்தோஷ் அவர்கள் தமிழ் மாநிலத் தலைவர் மரியாதைக்குரிய நயினார் நாகேந்திரன் அவர்கள் மற்றும் சக்கரவர்த்தி மற்றும் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட மற்ற நிர்வாகிகளோடு சென்னைக் கிழக்கு மாவட்டம் திருவான்மியூர் கிழக்கு மாடவீதியில் உள்ள காக்கும் கரங்கள் முதியோர் இல்லங்களில் சென்று அவர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பொதுமக்களுக்கான மதிய உணவு போன்றவற்றை வழங்கினோம். அடுத்து தென் சென்னை மாவட்டம் பாஜக மாவட்டத் தலைவர் சஞ்சீவி அவர்களின் ஏற்பாட்டில் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின் அருகே ஐந்து விளக்கு பகுதியில் தூய்மைப் பணியாளர்களுக்குப் பிரியாணி பொட்டலங்கள் மற்றும் பரிசு பொருட்களைக் கொடுத்தோம்! அதன் பிறகு மத்திய சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் லதா அவர்களின் தலைமையில் அயனாவரம் நூர் ஹோட்டல் அருகே உள்ள ஜி எஸ் மகாலில் இரத்ததான முகாம் மற்றும் அன்னதானம் வழங்கிக் கொண்டாடினோம். அதன் பிறகு மதியம் ஒரு மணி அளவில் வட சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் பாலாஜி அவர்கள் தலைமையில் முத்தமிழ் நகர் பவானி அம்மன் கோவில் அருகில் பொது மக்களுக்கென மருத்துவ உதவிகள் மற்றும் அன்னதானம் போக பல நலத்திட்ட உதவிகளை வழங்கினோம். இத்தகைய திட்டங்களுக்கெல்லாம் எஸ்ஆர்எம் மருத்துவமனை மூலமாக அவர்களின் ராயபுரம் மகப்பேறு மருத்துவமனைச் சேவைகளின் மூலம் அவர்களின் நற்சிந்தனை செயல்மூலம் திரு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பிறந்த நாளை மக்களிடையே ஒரு சிறப்பான நாளாக விழாவாக நடத்தினோம். இன்றைக்கு என் அளவில் ஒரு மனமார்ந்த திருப்தியும் மகிழ்ச்சியுமான ஒரு நாள்! பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! #Modi25Years





No comments:

Post a Comment

அமைதி பலவீனம் அல்ல; கட்டுப்பாடு!

  அமைதி பலவீனம் அல்ல; கட்டுப்பாடு!