Friday, September 25, 2026

நல்லவர்கள் இனி அரசியலுக்கு தேவையில்லை என நிலை…#தகுதியேதடை

 நல்லவர்கள் இனி அரசியலுக்கு தேவையில்லை என நிலை…#தகுதியேதடை

மதுராந்தகம் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக நன்கு களப்பணி செய்கின்றன. வெற்றி தோல்வி பற்றி நான் பேசவில்லை. தவெக களப்பணியில் மிகுந்த சுணக்கம் தெரிகிறது. தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் அவர்கள் அதிமுகவில் இருந்து விலகிய போது என்னுடைய வெற்றிக்கு அதிமுக மட்டும் காரணம் இல்லை எனக்கு இந்த தொகுதியில் நல்ல பெயர் உள்ளது அதனால் நான் வெற்றி பெற்றேன் என்றுஒரு பேட்டியில் கூறி வந்தார். ஆனால் அவர் இப்பொழதுபிரச்சாரத்தில் நான் நிற்கவில்லை இங்கு முதல்வர் விஜய்தான் நிற்கிறார். அவரது நல்லப் பெயர் என்ன ஆனது தெரியவில்லை.அந்தளவுக்கு அவருக்கு தொகுதி முழவதும் எதிர்ப்பு உள்ளது. முதல்வர் விஜய் பிரச்சாரத்தை மட்டுமே மரகதம் குமரவேல் கை கொடுக்கும் என்று நம்புகிறார். ஒன்று மட்டும் நிச்சயம் முதல்வர் விஜய் அவர்கள் எம்ஜிஆர அல்ல அவர் முகத்தில் காட்டினால் வாக்குகள் வீழ்வதற்கு. இன்றைய சூழ்நிலையில் பிரச்சாரப் பணியில் மரகதம் குமரவேல் மூன்றாம் இடத்தில்தான் இருக்கிறார். முதல்வர் விஜய் அவர்களுக்கு பெருத்த ஆதரவு எல்லாம் இருப்பதாக தெரியவில்லை. புதிய வேட்பாளர்களை தவெக நிறுத்தி இருந்தி இருந்தால் இந்த ஆட்சியை பற்றிய மதிப்பீடு தெரிந்து இருக்கும். ஒரே மாதத்தில் கட்சி மாறி மீண்டும் வேட்பாளராக போட்டியிடுவதால் தவெக வேட்பாளருக்கு எதிரான நிலையே உள்ளது.

No comments:

Post a Comment

#ஜெம்கிரானைட்வீரமணியின் கொடூரமான பாலியல் குற்றங்கள் சார்ந்து கடந்த ஒரு வாரமாக செய்திகள் அடிபட்டு உச்சத்தை அடைந்திருக்கிறது.

  #ஜெம்கிரானைட்வீரமணியின் கொடூரமான பாலியல் குற்றங்கள் சார்ந்து கடந்த ஒரு வாரமாக செய்திகள் அடிபட்டு உச்சத்தை அடைந்திருக்கிறது. இப்போதுதான் அ...