Friday, September 25, 2026

#ஜெம்கிரானைட்வீரமணியின் கொடூரமான பாலியல் குற்றங்கள் சார்ந்து கடந்த ஒரு வாரமாக செய்திகள் அடிபட்டு உச்சத்தை அடைந்திருக்கிறது.

 #ஜெம்கிரானைட்வீரமணியின் கொடூரமான பாலியல் குற்றங்கள் சார்ந்து கடந்த ஒரு வாரமாக செய்திகள் அடிபட்டு உச்சத்தை அடைந்திருக்கிறது. இப்போதுதான் அது பற்றித் தலைவர்கள் தங்கள் திருவாய்களை மலர்ந்து அருளியிருக்கிறார்கள்.

இது கடந்த நான்கு வருடங்களாக நடந்து வந்திருக்கிறது என்பதைப் பார்க்கும் பொழுது ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் ஊடகவாதிகள் பத்திரிகையாளர்கள் இன்னும் பல சமூக சேவகர்கள் சினிமாக்காரர்கள் அனைவரும் எதோ ஒரு வகையில் வீரமணியுடன் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதும் அது சம்பந்தமான விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்றும் வருவதையும் அறிகிறோம்.இந்த கிரானைட் தொழிலில் பலவருடங்களாகக் கொடிகட்டிப் பறந்த வீரமணி தனது எண்பத்தி நாலாம் வயதில் கேவலமானதொரு குற்றச்சாட்டில் சிக்கி இருக்கிறார்!முன்னாளில் இதற்கான . விசாரணைகள் எவ்வாறு மூடப்பட்டது அது சம்பந்தமாக யார் யார் அவரிடம் என்ன சலுகைகள் பெற்றார்கள் என்பதும் இதில் ஈடுபட்டவர்கள் அத்தனை பேர்வழிகளின் தொடர்புகளும் வெளிச்சத்திற்கு வரவேண்டும்!அவருக்கு உடந்தையாகவும் விசுவாசமாக இருந்த சிலர் அப்ரூவராக மாறி இப்போது உண்மைகளைக் கொட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த வழக்கைத் தீவிரமாக விசாரித்ததாகச் சொல்லும் பலரும் இவ்வழக்கின் உண்மைகளை மறைத்து வீரமணியால் லாபம் பார்த்திருக்கிறார்கள் என்பதும் விசாரணைக்கு உள்ளாகி இருக்கிறது. சமூகப்பார்வை நீதி குறித்து திரைப்படங்கள் எடுத்துவருவதாக ஊடகங்கள் மூலம் ஆக்ரோஷமான பேட்டிகள் கொடுக்கும் வெற்றிமாறன் மாரிசெல்வராஜ் போன்றவர்களெல்லாம் இதற்கு வாயைத்திறப்பதாகக் காணோம்! நேற்று வரை திமுகவை தூக்கி சுமந்த இந்துப்பத்திரிக்கை ராம் போன்ற பல போரளிகள் எங்கே போய்விட்டார்கள்.அமெரிக்க எஃப்ஸ்டீன் வழக்கைப்போல மனிதமனசாட்சியை உலுக்கும் இப்படியான செயல்களுக்கு யார் உடந்தையாக இருந்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள்தான். தமிழ் நாகரீகச்சமூகத்தில் இப்படிக் குழந்தைகள் மீதான வன்முறைகள் நடந்திருக்கிறதெனில் வெட்கித் தலைகுனியவேண்டும் அனைவரும். இவ்வளவிற்குப்பிறகுதான் இந்த அரசியல் தலைவர்கள் வாயைத்திறக்கிறார்கள் என்றால் இதற்கு முன்பு இதையெல்லாம் தெரியாமல் இருந்தார்களா? இல்லைதெரிந்தே மறைத்தர்களா!எவ்வளவு அவலமானவர்கள். பதவியும் பணமும் வசதியும் இருந்தால் எந்த எல்லைக்கும போக இந்நாட்டில் இடமிருக்கிறதா! (உ-ம் படத்தில் மார்டின் -ஆதவ் குடும்பத்தார் அஸ்டாலினுடன்) இந்த நிலையில மிகக் கடுமையாக நடவடிக்கைள் எடுத்து சட்டமும் நீதியும் காப்பாற்றப்படவேண்டும். இச்செயலைத் திரித்து வீரமணியைக் காப்பாற்ற சில அரசியல் தலைவர்கள் தனிநபர்கள் ஊடகதர்மங்கள் போன்றவை பலவகையிலும் முட்டுக் கொடுப்பதையும் பார்க்க முடிகிறது. நடந்து வரும் இவ்வழக்கிற்குள்ளேயும் அதிகார ஊடாட்டங்கள் தலையீடு செய்யலாம்!சாட்சிகள் கலைக்கப்படலாம். சரி அடுத்த செய்திக்குக்காத்திருக்கலாம் எனும் மனோபாவம் மிக மோசமாகி வருவதுதான் இதன் எதிர்கால அபாயம்.! வீரமணியின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், சத்தியநாயக்கன்பாளையம் .இவரஇன் தந்தை எஸ்.பி.ராமசாமி, திமுக 1962இல் தேர்தலில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். எஸ்.பி.ராமசாமியின் மருமகன்,கொன்னையாறு செ.கந்தப்பன் திமுக, நாடாளுமன்ற உறுப்பினர். திமுக ஆட்சியில் 1975வரை குடிநீர்வடிகால் வாரிய தலைவர். திமுகவில் 1989 வரை கொள்கை விளக்க செயலார்.எஸ்.பி.ராமசாமியும் அவரது மருமகன் கந்தப்பனும் இணைந்து துவக்கியதான் குவாரிதான் ஜெம் கிரானைட்பின தேவகவுடா போன்ற கர்நாடக மாநில தலைவரோடு அறிமுகம் மூலம் கிரானைட் தொழிலில் மேலும் உயர்ந்தார் தவெக அரசு இந்த நடவடிக்களுக்கு காரணம் அல்ல. நீதிமன்றமே காரணம் “பேயாட்சி செய்தால் பிணம்தின்னும் சாத்திரங்கள்” #gemgraniteveeramani #GemVeeramaniCase #POCSO #gemgraniteveeramani






No comments:

Post a Comment

#ஜெம்கிரானைட்வீரமணியின் கொடூரமான பாலியல் குற்றங்கள் சார்ந்து கடந்த ஒரு வாரமாக செய்திகள் அடிபட்டு உச்சத்தை அடைந்திருக்கிறது.

  #ஜெம்கிரானைட்வீரமணியின் கொடூரமான பாலியல் குற்றங்கள் சார்ந்து கடந்த ஒரு வாரமாக செய்திகள் அடிபட்டு உச்சத்தை அடைந்திருக்கிறது. இப்போதுதான் அ...