Tuesday, September 22, 2026

மன்னர் திருமலை நாயக்கரால் 1628 முதல் 1635 வரையிலான ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட வசந்த மண்டபம் எனப்படும் புது மண்டபத்தின் 1890ல் ஒரு கணநேர காட்சி......

 மன்னர் திருமலை நாயக்கரால் 1628 முதல் 1635 வரையிலான ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட வசந்த மண்டபம் எனப்படும் புது மண்டபத்தின் 1890ல் ஒரு கணநேர காட்சி......

பழமையான வரலாற்று சிறப்பு மிக்க மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த வசந்த மண்டபம் எனப்படும் புது மண்டபம் மதுரையில் மிகவும் பிரபலமான இடமாகும்!!! ஆண்டு தோறும் கோடைக் காலத்தில் வசந்த விழா கொண்டாடுவதற்காக இந்த வசந்த மண்டபம் என்ற இந்த புதுமண்டபத்தை திருமலை நாயக்கர் கட்டினார். இம்மண்டபம் முற்றிலும் கிரானைட் எனப்படும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதில் நான்கு வரிசைகளில் மொத்தம் 125 தூண்கள் கலைநயத்துடன் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. சிற்பிகளின் உன்னத உளி வேலைப்பாட்டினால் இம்மண்டபத்தின் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சிற்ப, கட்டடக் கலைத்திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இம்மண்டபம் விளங்குகிறது. #மதுரை #புதுமண்டபம் #madurai #historical #maduraimeenakshiammantemple #pudhumandapam #meenakshitemple #facebookpost #fbviralpost #timetravel



No comments:

Post a Comment

அமைதி பலவீனம் அல்ல; கட்டுப்பாடு!

  அமைதி பலவீனம் அல்ல; கட்டுப்பாடு!