Tuesday, September 8, 2026

சென்னையில் உள்ள இன்றும் பழமை மாறாத பாரம்பரிய கட்டிடமாக இருக்கும் பல கட்டிடங்களில் ஒன்றான இந்த கட்டிடம் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த கடிகார தயாரிப்பாளரான பீட்டர் ஓர் peter orr என்பவரால் உருவாக்கப்பட்ட பிஆர் அண்ட் சன்ஸ்!!!❤️🇮🇳🙏

 சென்னையில் உள்ள இன்றும் பழமை மாறாத பாரம்பரிய கட்டிடமாக இருக்கும் பல கட்டிடங்களில் ஒன்றான இந்த கட்டிடம் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த கடிகார தயாரிப்பாளரான பீட்டர் ஓர் peter orr என்பவரால் உருவாக்கப்பட்ட பிஆர் அண்ட் சன்ஸ்!!!❤️🇮🇳🙏

பலரது கைகளில் தவழும் கடிகாரங்களை தயாரித்து விற்கும் கடையாக கடிகார பழுது நீக்கம் செய்யும் கடையாக பலருக்கும் அறிமுகமான சென்னையின் பழமையான அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் P.Orr & Sons முதல் ஷோரூம் 1879 ஆம் ஆண்டு அண்ணாசாலையில் திறக்கப்பட்டது. அன்றைய ஆங்கிலேய அரசின் அரசாங்கத்தின் கட்டிடக் கலைஞரான ராபர்ட் சிஷோல்ம் என்பவரால் வடிவமைக்கப்பட்டது . இது இளவரசர் ஜார்ஜ் அவர்களால் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்தக் கடை வைரங்கள், இயந்திர உபகரணங்கள், துப்பாக்கிகள், வெள்ளி பொருட்களை விற்றது. பின்னர் கடிகாரங்களை விற்கத் தொடங்கியது. இந்தியாவில் முதல் ரோலக்ஸ் வாட்ச் 198 ரூபாய்க்கு உத்தேசமாக 1900 ஆண்டு வாக்கில் விற்கப்பட்ட இடம் இது. இந்த ஸ்தாபனம் 1967 ஆம் ஆண்டு புகழ்பெற்ற ஜவுளி மில் முதலாளியான கருமுத்து தியாகராஜன் செட்டியாருக்கு விற்கப்பட்டது.இன்று பி.ஆர் அன் சன்ஸ் க்ரூப் ஆஃப் கம்பெனிகள் அவரது விற்பனை குழுமத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இதற்கு அருகில் இந்தியா சில்க் ஹவுஸ் காதி கிராம பவன் எதிரில் இராஜாஜி ஹால் சற்று தள்ளி பழைய தி மெயில் பத்திரிகை அலுவலகம் (இது தி இந்து பத்திரிக்கை அலுவலகமாகவும் இருந்தது) பின்னால் புகழ்பெற்ற ரிச்சி தெரு போன்றவை உள்ளன. படத்தில் மிகவும் பழமையான பி.ஆர் அன் சன்ஸ் கட்டிடத்தின் நூறாண்டு கால இடைவெளி தோற்றங்கள்... #சென்னை #pransons #mountroad #அண்ணாசாலை #chennaicity #goodmemories #chennai #oldmadrasroad #annasalai #MadrasHistory



No comments:

Post a Comment

SEP 6