Wednesday, September 9, 2026

2/ #வரலாறுஅறியாமனிதர்கள் #இன்றையசட்டமன்றஉறுப்பினர்கள் —————————————————————

 2/

#வரலாறுஅறியாமனிதர்கள் #இன்றையசட்டமன்றஉறுப்பினர்கள் ——————————————————————— #தமிழகச்சட்டப்பேரவையில் முதல் மாற்றுப் பெண் சபாநாயகராக சத்தியபாமா அவர்களை நியமித்திருப்பது ஏதோ வரலாற்றில் இதுவரை நிகழாத அதிசயம் போலச் சட்டசபையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 1950 களிலேயே ருக்மணி லட்சுமிபதி, அம்மணி ராஜி போன்றோர் தமிழக சட்டசபையில் இந்தப் பதவிகளை வகித்திருக்கிறார்கள். அந்த மரபுகளை எல்லாம் கடந்த 50 வருட கால ஆட்சிகள் தொடராமல் போனதற்கு யாரைக் குறை சொல்வது! பெண்ணுரிமை பேசுவார்கள் ஆனால் நடைமுறையில் இருக்காது! ஏன் பெண்களை இந்தப் பதவிக்கு கொண்டு வரவில்லை என்று கடந்த கால ஆட்சியாளர்களிடம் தான் கேட்க வேண்டும்! ஆனால் இன்று சத்தியபாமா அவர்கள் ஏதோ முதன் முதலாக இப் பொறுப்பிற்கு வந்திருப்பதாக மார்தட்டிக் கொள்பவர்கள் வரலாறை படிக்காதவர்கள் தெரியாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்! அவர்கள்தான் வரலாறே தேவையில்லை என்று சொல்பவர்களாயிற்றே! நேற்று நடந்தது இன்றைக்கு தெரியவில்லை. அண்ணா ஆட்சி காலத்தில் கருத்திருமன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் என்று சொன்னால் அவர் யார் எந்த ஊர் என்று அவரின் சொந்த ஊர் சத்தியமங்கலத்திலேயே கேட்கிறார்கள்! இது மாதிரித் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்! என்றால் இது கல்வியில் சிறந்த தமிழ்நாடா? இல்லை புரட்சியில் சிறந்த தமிழ்நாடா? ஏற்கனவே 50 வருடகாலச் சீரழிவின் விளைவுகள்தான் இத்தகைய அலங்கோலங்கள் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்! எது ஒன்றை எடுத்தாலும் எதிர்ப்பு மறுப்பு! இப்படியான ஆட்களை வைத்துக் கொண்டு இவர்களுக்கு அரசியல்! வரலாறு தெரியாமல் இணையத்தில் இஷ்டத்திற்கு எதையாவது எழுதுவது! பதவிகளின் மாண்பு அறியாமல் வெற்றுப் பெருமை பேசிக்கொண்டிருப்பது! என்ன செய்ய! ஆயிரம் ஓட்டைகள்! #தாழ்ந்த_தமிழகமே…. என்ன சொல்ல⁉️ #tamilnadupolitics #tamilnadulegistativeassembly #KSRadhakrishnan #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்

No comments:

Post a Comment

SEP 6